பராமரிப்பு நிலையத்தில் நாய்களுக்கு மஞ்சள் காமாலை; தனிமைப்படுத்தியது ‘ஏவிஏ’

நாய்­களைப் பகல் நேரத்­தில் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய நிலையம் ஒன்றில் 'லெப்­டோஸ்பை­ரோ­சிஸ்' எனப்­படும் மஞ்சள் ­கா­மாலை நோய்­கண்ட நாய்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் அந்த நிலையம் தனிமைப்­படுத்­தப்­பட்­டுள்­ளது. வேளாண்= உணவு, காலநடை மருத்­துவ ஆணையம் (ஏவிஏ), சுகாதார அமைச்சு, தேசிய சுற்­றுப்­புற வாரியம் ஆகியன இணைந்து வெளி­யிட்ட அறிக்கை­யில், கடந்த ஆண்டு முதல் இந்நிலை­யத்­தில் பரா­ம­ரிக்­கப்­படும் நாய்­களில் மஞ்சள் காமாலை நோய்­கண்ட நாய்­களின் எண்­ணிக்கை அதி­ க­ரித்து இருப்­ப­தாக கால்நடை மருத்­து­வர்­கள் தகவல் அளித்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டது.

2014ஆம் ஆண்டில் விலங்­கு­கள் இந்த நோயினால் பாதிக்­கப்­பட்ட தகவல் எதுவும் இல்லாத நிலையில் சென்ற ஆண்டு இரண்டு நாய்­களும் இவ்­வாண்டு தொடக்­கம் முதல் 18 நாய்­களும் இந்த நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பதிவு செய்­யப்­ பட்­டுள்­ளது. சென்ற மாதம் 27ஆம் தேதிக்­கும் இம்­மா­தம் 14ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 'சன்னி ஹைட்ஸ்' பக­ல்நே­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் உள்ள 12 நாய்கள் இந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள ­தா­க 'ஏவி­ஏ'­வுக்­குத் தெரி­விக்­கப் ­பட்­டுள்­ளது.

அதனைத் தொடர்ந்து அந்த நிலை­யத்­தில் 'ஏவி­ஏ­'வின் அனு ­ம­தி­யின்றி எந்த நாயையும் வெளி­யேற்­றவோ, அனு­ம­திக்­கவோ கூடாது என ஆணையம் தனிமைப்­படுத்­தும் ஆணையைப் பிறப்­பித் ­துள்­ளது. அத்­து­டன் அந்த நிலை­ யத்தை முழுமை­யா­கச் சுத்­தப்­படுத்தி கிருமித் தொற்று நீக்க நட­வ­டிக்கை­களை அது மேற்­கொள்ள வேண்டும். 'டர்ஃப் கிளப்' ரோட்டில் உள்ள அந்த நிலை­யத்தை இம்­மா­தம் 12ஆம் தேதி பார்வை­யிட்ட ஏவிஏ அதி­கா­ரி­கள் அங்கு எலி­களின் நட­மாட்­டம் ஏது­மில்லை என்ற­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!