செங்காங்கில் தீ விபத்து

அண்டை வீட்டில் ஏற்­பட்ட தீ விபத்­தி­லி­ருந்து தப்­பிக்க திருமதி சுரேஷ் தனது 2 வயது குழந்தை, உட்பட குடும்பத்­து­டன் மாடிப்­ப­டி­களின் வழி இறங்க முற்­பட்­ட­போது கொளுந்­து­விட்டு எறிந்த தீ அவர்­களைத் தடுத்­தது. நல்­ல­வேளை­யாக, தீயணைப்­பா­ளர்­களின் உதவி­யால் தப்­பி­னர். தீச்­சம்ப­வம் கம்பஸ்­வேல் சாலையில் உள்ள புளோக் 257Bன் மூன்றா­வது மாடியில் புதன்­கிழமை அதிகாலை மணி 4.15க்கு ஏற்­பட்­டது. இந்தச்சம்ப­வத்­தால் சுமார் 20 பேர் வெளி­யேற்­ற­பட்­ட­னர் என்று குடிமைத் தற்­காப்புப் படை தெரி­வித்­தது. விபத்து ஏற்­பட்ட நேரத்­தில் வீட்டில் யா-ருமில்லை. குறும்பு நோக்­கத்­து­டன் தீ வைக்­கப்­பட்­ட­தாக போலிஸ் இந்தச் சம்பவத்தை வகைப்­படுத்­தி­யது.

37 வயது போலிஸ் அதிகாரி சுவா­சப்­பி­ரச்­சனைக்­காக சிங்கப்­பூர் பொது மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­ட­தாக 'த நியூ பேப்பர்' நேற்று தெரி­வித்­தது. அந்த நான்கு அறை வீட்டின் அறை­க­லன் அனைத்­தும் தீக்கு இரை­யா­ன­தா­க­வும் வீட்டில் குடி­யி­ருந்த­வர்­கள் பேட்டி கொடுக்க மறுத்து விட்­ட­தா­க­வும் 'த நியூ பேப்பர்' தெரி­வித்­தது. வீட்டில் இருந்­தோர் அதி­க­மான பொருட்­களை வீட்­டுக்கு வெளியே நிரப்பி வைத்­தா­க­வும் அருகில் வசித்­த­வர் கூறினார். அரை மணி நேரத்­தில் தீ அணைக்­கப்­பட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!