ஆகஸ்ட் 28ல் சாஃப்ரா ஓட்டம்

சா ஃ ப்ரா சிங்கப்பூர் வளைகுடா மெதுவோட்ட நிகழ்ச்சியும் ராணுவ நெட்டோட்ட நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளில் கடந்த பல ஆண்டுகளில் கலந்து கொண்டு இருப்பவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், யோசனை களின் அடிப்படையில் இந்த ஆண்டு மாற்றங்கள் இடம்பெறுகின்றன. 'வாழ்க்கைக்கு குடும்பம் 800 மீ. சவால்' என்ற ஒரு நிகழ்ச்சியில் தாய்மார்கள் கலந்துகொள்ளலாம். குடும்ப உறவை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ராணுவ பயிற்சி எப்படி இருக்கும் என்பதை பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படை வீரர்களுக்கு உரிய பயிற்சி சோடனைக் காட்சியும் இந்த ஆண்டு இடம் பெறும். ராணுவ நெட்டோட்ட நிகழ்ச்சி எஸ்பிளனேட் பாலத்தில் இருந்து தொடங்கி 21கிமீ. தொலைவுக்கு நடைபெறும்.

இந்த ஆண்டு இதில் கலந்து கொள்வோர் கொஞ்சம் கூடுதல் தொலைவு ஓடுவார்கள். இந்த ஆண்டு சா ஃ ப்ரா மெதுவோட்ட நிகழ்ச்சியில் ஏறக்குறைய 42,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சாஃப்ராவின் 'ஆர்மி ஹால்ஃப் மாரத்தான்' என்றழைக்கப்படும் நெட்டோட்டத்தில் பங்குபெறும் தேவதாஸ், லிம் ஸியாம் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். படம்: சாஃப்ரா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!