14 நாட்களில் 5 கொலைகள்; ‘சட்டம் குற்றவாளிகளிடம் முழுவீச்சில் பாயும்’

சிங்கப்பூரில் அண்மைய நாட்களில் கொலைகள் அதிகம் நிகழ்ந் துள்ளதையடுத்து குற்றவாளிகள் மீது சட்டம் முழு வீச்சில் பாயும் என்று போலிஸ் கடுமையாகத் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க போலிஸ் எல்லா முயற்சி களையும் மேற்கொள்ளும் என்று புலன்விசாரணை, வேவுத்துறைக் கான போலிஸ் துணை ஆணையர் டான் சை ஹீ தெரிவித்தார். சிங்கப்பூரை பாதுகாப்பானதாக வைத்திருக்க போலிஸ் உறுதி பூண்டுள்ளதாகவும் குற்றவாளிகள் மீது சட்டம் முழு வீச்சில் பாயும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் சிங்கப் பூரில் பல கொலைகள் நிகழ்ந் துள்ளதாகத் தெரிகிறது. லிம் சூ காங்கில் அடர்ந்த காட்டில் திரு வாட்டி சூய் யாஜி என்ற மாதின் உடல் எச்சங்கள் காணப்பட்டன. அவரைக் கொலை செய்ததாக 48 வயது லெஸ்லி கூ க்வீ ஹோக் என்பவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இதர நான்கு சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. அவை கொலைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. போட் கீயில் இருக்கும் தாஜ் மகால் பாலிவுட் இசை, மதுபானக் கூடத்தில் ஜூலை 13 ஆம் தேதி காலை 5 மணிக்கு, 55 வயது ஆரோக்கியசாமி பால் ராஜூ என் பவரைக் கொலை செய்ததாக 47 வயது தென்னரசு கருப்பையா என்பவர் மீது ஜூலை 19ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!