ஷாமினியின் ‘ஹான்’ படத்துக்கு ‘டிபிஎஸ் தலைசிறந்த திரைப்பட விருது’

நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயது ஷாமினி குணசேகரன் தயாரித்த 'ஹான்' என்ற திரைப் படம் இந்த ஆண்டின் தேசிய இளையர் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் 'டிபிஎஸ் தலைசிறந்த திரைப்பட விருதை' வென்றிருக்கிறது. ஒருவர் ஒரு சிறுமியைச் சாலை விபத்தில் கொன்றுவிடுகிறார். அந்தச் சிறுமியின் பெற்றோரைத் தேடி அவரது தந்தை கொரியாவுக்குச் செல்கிறார். இதை விவரிக்கும் அந்தத் திரைப்படம் நேற்று நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோனாத்தன் சூவிற்கு தலை சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத்தந்துள்ளது.

தேசிய இளையர் திரைப்பட விருது போட்டி தலைசிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் இடம்பெறுகிறது. 'ஸ்கேப்' என்ற அமைப்பும் சினிமா மீடியா என்ற நிறுவனமும் இந்த விருதுக்கு ஏற்பாடு செய்கின் றன. இந்த ஆண்டு இந்த விருதை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி பிரதி நிதிக்கிறது. கலாசார, சமூக இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்றைய விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா கக் கலந்துகொண்டார். "திரைப்படம் என்பது இளையர் களைத் தூண்டிவிடும் சக்தி வாய்ந்த ஊடகம்," என்று அமைச் சர் குறிப்பிட்டார். இந்த விருதின் வழியாக மேலும் பல இளம் சிங்கப் பூரர்கள் தங்களுடைய திரைப்படத் தயாரிப்பு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார் கள். அவர்களுக்கு ஆதரவும் வழங்கப்படுகிறது என்றும் அமைச் சர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!