முன்னாள் அமைச்சர் டான் எங் லியாங் சுயசரிதை வெளியீடு

சிங்கப்பூரின் முன்னாள் மூத்த நிதித் துணை அமைச்சர் டாக்டர் டான் எங் லியாங் நேற்று "எளிய தொடக்கம்: நேர்மை, மீட்சித்திறன், சேவை வாழ்வை அமைத்தல்" என்ற தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். அந்த நூல் வெவ்வேறு துறை களில் அவர் மேற்கொண்ட பல் வேறு பணிகளையும் அவரின் வாழ்க்கையையும் திறம்பட எடுத் துக் கூறுகிறது. டாக்டர் டான், 79, அந்த நூலை தன் புதல்வியுடன் சேர்ந்து எழுதி யிருக்கிறார். துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், அனைத்துலக ஒலிம்பிக் குழு உறுப்பினர் இங் செர் மியாங், பொதுத் தூதர் டோமி கோ ஆகி யோரும் முன்னாள் அரசியல், விளையாட்டுத் துறை பிரமுகர் களும் கலந்துகொண்ட நிகழ்ச்சி யில் அவர் தமது சுயசரிதை நூலை வெளியிட்டார்.

இவர்களில் பலரும் அந்த நூலில் டாக்டர் டானுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். நூல் வெளி யீட்டு நிகழ்ச்சியில் பலரும் உரையாற்றினர். டாக்டர் டானின் சுயசரிதை நூல் சிங்கப்பூரில் முக்கிய புத்தகக் கடைகளில் கிடைக்கும். அதை www.graceworks.com.sg முகவரி யிலும் $40க்கு வாங்கலாம். பொதுத் தூதர் பேராசிரியர் கோவும் டாக்டர் டானும் ராபிள்ஸ் பள்ளியில் படித்தவர்கள். 60 ஆண்டுக்கும் அதிக காலம் நன்கு தெரிந்தவர்கள். "ஒருவருக்கு வாழ்வில் பணம் வந்ததும் அவர் மாறிவிடுகிறாரா என்பது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்.

டாக்டர் டான் வாழ்வில் அசாதாரணமான வெற்றியைப் பெற்றாலும் அவர் மாறாத ஒரு மனிதர். "எளிமையானவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பல வழிகளில் அவர் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்," என்று பேராசிரியர் கோ குறிப் பிட்டார். டாக்டர் டான் விளையாட்டில் குறிப்பிடத்தக்க ஈடுபாடு கொண்ட வர். "டாக்டர் டான் கடுமையானவர். ஆனால் அவருடைய இதயம் எப்போதுமே விளையாட்டு வீரர் களைச் சுற்றியே வலம் வரும்," என்று அனைத்துலக ஒலிம்பிக் குழு உறுப்பினர் திரு இங் பாராட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!