ஆண்டு இறு­திக்­குள் நகர மன்றங்களுக்கான சட்டத் திருத்தம்

நகர மன்றங்கள் பொது நிதியை முறை­யா­கக் கையாள்­வதை உறுதி செய்­யும் வகை­யில் இந்த ஆண்டு இறு­திக்­குள் சட்­டத்­தில் மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­லாம். இதனை தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி ­வித்­தார். நகர மன்றங்கள் சரி­யான நிர்­வா­கக் கட்­டமைப்பைக் கொண்­டுள்­ ளதை உறுதி செய்­யும் வகை­யில் இந்த சட்டத் திருத்­தம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. நீ சூன் குழுத்தொகுதியைச் சேர்ந்த கெபுன் பாரு­வுக்கு அவர் வருகை­ய­ளித்த போது செய்­தி­யா­ளர்­களி­டம் இதனைத் தெரி­வித் ­தார். இந்த சட்டத் திருத்­தப் பணி­கள் பல ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ ளப்­பட்டு வரு­கின்றன.

அல்­ஜு­னிட்=ஹவ்­காங் நக­ர­மன்றத்­தின் கணக்­கு­களி­லும் செயல்­பாடு­களி­லும் இருந்த குறை­பாடு­களைக் கடந்த வாரம் சுயேச்சை தணிக்கை நிறு­வ­ன­மான கேபி­எம்ஜி அடை­யா­ளம் காட்­டி­யது. கடந்த ஐந்தாண்­டு­க­ளாக அல்­ஜு­னிட்=ஹவ்­காங் நக­ர­மன்றத்­தில் நிர்­வா­கக் கட்­டமைப்பு, நிதிக் கட்­டுப்­பாடு, நிதி அறிக்கை. கொள்­மு­தல், பதி­வுப் பரா­ம­ரிப்­பு­கள் ஆகி­ய­வற்­றில் குறை­பாடு­கள் இருந்து வரு­வது தெரிய வந்துள்ளது. அண்மை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட குறை­பாடு­களே சட்­டத்­தி­ருத்­தத்­தின் முக்­கி­ யத்துவத்தை வலி­யு­றுத்­தி­ய­தாக அமைச்­சர் வோங் தெரி­வித்­தார். சட்ட ரீதி­யி­லான மாற்றம் ஏற்­கெ­னவே நன்கு ஆய்வு செய்து முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டு இறு­திக்­குள் அது நடப்­புக்கு வரும் என்று எதிர்­ பார்க்­கி­றோம் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்­டில் பாட்­டா­ளிக் கட்­சி­யின் நகர மன்றக் கணக்­கு­களில் குறை­பாடு­கள் இருந்தது அடை­யா­ளம் காணப்­பட்­டது. அதைத் தொடர்ந்து அர­சாங்கம், நகர மன்றங்களுக்­கான சட்டம் மறு­ஆய்வு செய்­யப்­படு­கிறது என அறி­வித்­தி­ருந்தது.

கெபுன் பாரு­ தொகுதியில் உள்ள அங் மோகோய உணவங்காடி நிலையம், சந்தைக்கு வருகை­யளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், உணவங்காடியில் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார். படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!