ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவை: அமைச்சர் கான் கிம் யோங் வலியுறுத்தல்

சிங்கப்­பூ­ரில் சுகா­தாரச் சேவை­யின் தேவை அதி­க­ரித்­துள்­ளது. அதனை ஈடு­கட்­டு­வ­தற்கு அர­சாங்க, தனி­யார் சுகா­தாரச் சேவை வழங்­கும் மையங்கள் ஒருங்­கிணைந்த முறை­யி­லான சேவை யை வழங்­கு­வ­தற்கு இணைந்து செயல்­பட வேண்­டும் என சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் கேட்­டுக் கொண்டார். நேற்று முன்தினம் ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெற்ற ராஃ­பிள்ஸ் மருத்துவக் குழு­மத்­தின் 40வது ஆண்­டு­விழா விருந்­தில் உரை­யாற்­றிய அமைச்சர் இதனை வலி­யு­றுத்­தினார். சிங்கப்­பூ­ரில் மூத்­தோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது. வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் நான்­கில் ஒரு சிங்கப்­பூ­ரர் 65 வயது அல்லது அவ்­வ­யதைத் தாண்­டி­ய­வ­ராக இருப்­பர். அப்­போது அவர்­களின் தேவைக்­கேற்ப சுகா­தா­ரச் சேவை வழங்­கு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். குறிப்­பாக நாள்­பட்ட நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்­குச் சிகிச்சை வழங்­கு­வதை அவர் சுட்­டிக்­காட்­டினார்.

2015ஆம் ஆண்டு முதல் சிங்கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை­யின் மருத்­துவ அவ­சர வாக­னத்­தின் மூலம் கொண்டு வரப்­படும் நோயா­ளி­களுக்கு ராஃ­பிள்ஸ் மருத்­து­வ­மனை சிகிச்சை வழங்கி வரு­கிறது. சுகா­தார அமைச்­சும் ராபி­ஃள்ஸ் மருத்துவக் குழு­ம­மும் பங்கா­ளித்­துவ முறை­யில் செய்து கொண்ட ஒப்­பந்தத்­தின் அடிப்­படை­யில் இது­வரை­யி­லும் 2,400 பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டுள்­ளது. "இங்கு சிகிச்சை பெற்ற அந்த நோயா­ளி­களி­டம் பொது மருத்­து­வ­மனை­களில் வசூ­லிக்­கப்­படும் சலுகைக் கட்­ட­ணத்தைப் போலவே கட்டணம் வசூ­லிக்­கப் ­பட்­டது. தனி­யார், பொது மருத்­து­வ­மனை­களின் இந்த ஒருங்­கிணைப்பால் அவ­சர சிகிச்சை பெறும் முறையை மேம் பட்டுள்ளது," என்றார் அவர். இந்த விருந்து நிகழ்ச்­சி­யில் தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­திற்கு $1 மில்­லி­யனை ராஃ­பிள்ஸ் மருத்துவக் குழுமம் நன்­கொடை­யாக அளித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!