கொலைக்குற்ற சந்தேகப் பேர்வழியை சம்பவ இடத்துக்கு கொண்டுசென்ற போலிஸ்

கேலாங் லோரோங் 23ல் ஓர் ஆடவரைக் கொலை செய்திருக் கிறார் என்று சந்தேகிக்கப்படும் 64 வயது ஆசாமியை போலிஸ் புலன்விசாரணை அதிகாரிகள் நேற்று கேலாங்கில் பல இடங் களுக்கு நேரடியாக அழைத்துச் சென்றனர். தோ சியா குவான் என்ற அந்த ஆசாமி ஜூலை மாதம் 9ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடையில், கோ எங் தியாம், 52, என்ற காப்பிக்கடை உரிமையாளர் ஒருவரைக் கொலை செய்திருக்கிறார் என்று கூறப்படு கிறது.

தோவை நேற்று அதிகாரிகள் வெள்ளை நிற வாகனம் ஒன்றில் கேலாங் லோரோங் 23க்கு அழைத் துச் சென்றார்கள். கைகளும் கால்களும் கட்டப் பட்ட நிலையில் தோ போலிஸ் அதிகாரிகளுடன் காணப்பட்டார். ஹோக்கியன் மொழியில் அதி காரிகளுடன் அவர் பேசினார். பல இடங்களை அதிகாரிகளுக்கு அவர் காட்டினார். தோவுக்கும் கொலையுண்ட ஆடவருக்கும் சண்டை மூண்ட இடத்தையும் அதிகாரிகளிடம் தோ காட்டினார். லோரோங் 23ம் கேலாங் ரோடும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் விக்டோரியா ஃபுட் கோர்ட் காப்பி கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஓர் இடத்தையும் அதிகாரிகளுக்கு அவர் சுட்டிக்காட்டினார்.

கொலைகாரர் என்று சந்தேதிக்கப்படும் தோ சியா குவான், 64, என்ற நபரை, கேலாங் லோரோங் 23ல் ஜூலை 9ஆம் தேதி கோ எங் தியாம், 52, என்பவர் கொலையுண்ட இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சிம்ஸ் அவென்யூவில் இருக்கும் ஒரு கடையில் செருப்பையும் கத்தியையும் தோ வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடையில் தோவுடன் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!