‘பங்ளாதே‌ஷுக்கு செல்வோர் பாதுகாப்பை உறுதி செய்க’

பங்க­ளா­தே­‌ஷுக்­குப் பயணம் மேற்­கொள்­ளும் சிங்கப்­பூ­ரர்­கள் விழிப்­பு­டன் இருக்­கு­மாறு வெளி­யு­றவு அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. இம்­மா­தத் தொடக்­கத்­தில் அங்­குள்ள உணவுக் கடையில் 20 பேரின் உயிரைப் பலி­கொண்ட பயங்க­ர­வாதத் தாக்­கு­தல்­களைக் கருத்­தில்­கொண்டு இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பங்­ளா­தேஷ் செல்லும் சிங்கப்­பூ­ரர்­கள் தங்க­ள் பாதுகாப்­புக்­குத் தேவையான, நடப்பு செய்­தி­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிப்­பது உள்ளூர் அதி­கா­ரி­களின் அறி­வுரை­களை ஏற்பது போன்ற அனைத்து நட­வ­டிக்கை­களை­யும் மேற்­கொள்­ளு­மாறு வெளி­யு­றவு அமைச்சு வலுவான ஆலோ­சனையை நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட பயண அறிக்கை­யில் குறிப்­பிட்­டி­ருந்தது.

நெரிசல்மிகு இடங்களுக்­கும் வெளி­நாட்­ட­வர் நாடிச் செல்லும் பிர­ப­ல­மான இடங்களுக்­கும் செல்வதை முடிந்த­வரை தவிர்க்­கு­மா­றும் பயணக் காப்­பு­று­தியைப் பெற்றுக்­கொள்­ளு­மா­றும் ஆலோ சனை வழங்கப்­பட்­டுள்­ளது. பங்­ளா­தேஷ் செல்வோர் ht­tps://er­e­gi­s­t­er.mfa.gov.sg/ எனும் இணையப்பக்­கத்­தில் ­ப­திவுசெய்­து­கொள்ள வெளி­ யு­றவு அமைச்சு ஊக்­கு­விக்கிறது. தூதரக உதவி அவ­ச­ரமா­கத் தேவைப்­படு­வோர் டாக்­கா­வில்­உள்ள சிங்கப்­பூர் தூத­ர­கத் துடன் கீழ்க்­கண்ட முக­வ­ரி­யில் தொடர்­பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!