$230,000 மதிப்புள்ள இணைய மோசடிகள்: 55 பேர் மீது போலிஸ் விசாரணை

இணைய மோசடிகள் தொடர்பில் 55 பேரிடம் தான் விசாரணை நடத்தி வருவதாக போலிஸ் தெரி வித்துள்ளது. அவர்கள் 150 இணைய மோசடிகளில் சம்பந்தப் பட்டவர்கள். இம்மாதம் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மூன்று நாள் சோதனை நடவடிக் கையில் மேற்கண்டவர்கள் சிக்கி னர் என்றும் அவர்கள் $230,000 மேற்பட்ட பரிவர்த்தனைகள் கைமா றுவதற்குக் காரணமானவர்களாக இருக்கக்கூடும் என்றுக் தெரிவிக் கப்பட்டது. விசாரிக்கப்படும் 55 பேரில் 27 பேர் ஆண்கள், 28 பேர் பெண்கள் என்றும் அவர்கள் 17 முதல் 72 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் போலிஸ் தெரிவித்தது. அவர்களில் பெரும்பாலோர் இணையம் மூலம் பொருட்களை விற்பவர்களாகச் செயல்பட்டு, இறுதியில் பொருட்களை வாங்கி யவர்களிடம் அவற்றை அனுப்பா மல் ஏமாற்றியவர்கள் என்று நம்பப்படுகிறது.

உள்ளூர் சுற்றுலா இடங் களுக்கு நுழைவுச்சீட்டுகள், பற்றுச்சீட்டுகள், கைத்தொலை பேசிகள், ஹோட்டல் அறை முன் பதிவுகள் போன்றவை இணையம் மூலம் நடத்தப்பட்ட பரிவர்த்தனை களில் சில. விசாரிக்கப்படும் மற்றவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளுக்குத் துணை போனவர்கள். பொருட்க ளுக்கான பணத்தைப் பொருள் வாங்குபவர்களிடமிருந்து பெற்று அதை ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு மாற்றி விடுவதே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது என் றும் அறிக்கை கூறுகிறது. குற்றவாளிகள் என்று நிரூபிக் கப்படுபவர்கள் 10 ஆண்டு சிறை யுடன் அபராதத்தையும் தண் டனையாகப் பெறக்கூடும். கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்தைப் புரி வோருக்கு 10 ஆண்டு சிறையும் $500,000 வரையிலான அபராத மும் விதிக்கப்படலாம்.

Loading...
Load next