கடன்முதலை செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகம்; ஆறு பேர் கைது

கடன் முதலை காரியங்களில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக் கப்பட்டதன் பேரில் மூன்று ஆடவர்களையும் மூன்று மாதர் களையும் போலிஸ் கைது செய்திருக்கிறது. அவர்களுக்கு வயது 27 முதல் 59 வரை என்று போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சென்ற மாதம் 28ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்த இரண்டு நாள் நடவடிக்கையில் மத்திய போலிஸ் பிரிவு அதிகாரிகள் பிடோக், ஹவ்காங், புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் வெஸ்ட், செங்காங் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் வங்கிக் கணக்குகளைத் திறந்து, தங்கள் ஏடிஎம் அட்டையையும் சொந்த ரகசிய எண்களையும் கடன்முதலைக் கும்பல்களிடம் கொடுத்ததாகவும் அவற்றைக்கொண்டு அந்தப் பேர்வழிகள் உரிமம் இல்லாமல் பணம் கடன் கொடுத்து வாங்கியதாகவும் தொடக்க புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடப்பதாக போலிஸ் குறிப்பிட்டது.
எந்த ஒரு நபரின் வங்கிக் கணக்கோ அல்லது ஏடிஎம் அட்டையோ உரிமம் பெறாதவர் நடத்தும் கொடுக்கல், வாங்கல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்த கணக்கின் அல்லது அட்டையின் சொந்தக்காரர் அந்த சட்டவிரோத காரியத்திற்கு உதவியிருக்கிறார் என்று பணம் கடன்கொடுப்போர் சட்டம் 2010 கூறுகிறது.

முதல் தடவையாக குற்றம் செய்திருந்தால் $30,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். மேலும் நான்கு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!