சமூக உண்டியல் பெருநடை நிகழ்ச்சியில் 7,000 பேர் பங்கேற்பு

சமூக உண்டியல் 'ஹார்ட்ஸ்ட் ரிங்ஸ்' பெருநடை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் 7,000 பேருக்கும் அதிக மக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளித்துச் சிறப்பித்தனர். உடற்குறையாளர்களும் மற்ற வர்களும் கலந்துறவாடி மகிழ்வ தற்கு வசதியாக குடும்பங்களுக் குத் தோதான வகையில் நேற்றைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிறுவனங்கள், தொண்டூழியர் கள், அறப்பணி அமைப்புகள் மூலம் நன்மை அடைபவர்கள், சமூகச் சேவை நிறுவனங்கள், பொதுமக்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமூக உண்டியலுக்கு உறுதுணை யாக இருந்தனர்.

சமூக உண்டியல் பெருநடை நிகழ்ச்சியில் நான்கு கிலோமீட்டர் கேளிக்கைப் பெருநடை, ஆகா யத்தை நோக்கி ஓட்டம் என்ற செங்குத்தான நெடுவோட்டம், குடும்பக் கேளிக்கை நிகழ்ச்சி எல்லாம் இடம்பெற்றிருந்தன. அன்றாட வாழ்க்கையில் உடற் குறையாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மக்கள் சிறந்த முறை யில் புரிந்துகொள்ள உதவும் வகை யில் பல கூடங்களும் அமைக்கப் பட்டிருந்தன.

தற்காலிக பிரதமர் டியோ சீ ஹியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேளிக்கை பெருநடை நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமைச்சர்கள் கூட்டத்தின ருடன் சேர்ந்து பெருநடையில் ஈடு பட்டனர். பிறகு அவர்கள் குடும்பக் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கிடையே, "இந்த ஆண்டு நிகழ்ச்சி உடற்குறையாளரும் மற்ற வரும் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடி மகிழ்வதற்குப் பல வாய்ப்புகளை வழங்கியது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "இந்நிகழ்ச்சிகள் மூலம் நம் சமூகத்தில் உடற்குறையாளர்கள் பற்றிய புரிந்துணர்வு அதிகரிக்கும். இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்திருக் கும் பெருந்தன்மைமிக்க ஆதரவு குறித்து சமூக உண்டியல் மகிழ்ச்சி யடைகிறது," என்று அதன் தலை வர் பிலிப் டான் தெரிவித்தார்.

சமூக உண்டியல் 'ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ்' பெருநடை நிகழ்ச்சியில் தற்காலிக பிரதமர் டியோ சீ ஹியன் அம்பெய்தலில் தமது திறனை வெளிப்படுத்துகிறார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் வலப்பக்கம் நிற்கிறார். படம்: சமூக உண்டியல்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!