பசுமைப் புத்தாக்க உத்தி விருதை வென்றது வீவக

பொங்கோலில் புத்தாக்க யோசனை களுடன் பசுமை சூழ்ந்த ஒரு நீர்வழியை ஏற்படுத்தி அதற்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பொறியியல் விருதை வென்று இருக்கிறது. சிங்கப்பூரில் மனிதர்கள் உரு வாக்கிய நீர்நிலைகளில் இந்த பொங்கோல் நீர்நிலையே ஆக அதிக நீளமானது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் தின் கட்டட, ஆய்வு கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அந்த 4.2 கிலோமீட்டர் நீர்நிலை நெடுகிலும் பசுமை வளத்தை ஏற்படுத்தி, குடி யிருப்பாளர்கள் வாழவும் பொழுது போக்கவும் சிறந்த சூழலை உருவாக்கினர். இதற்காக அந்தப் பொறியாளர் குழுவுக்கு சென்ற மாதம் 23ஆம் தேதி சிங்கப்பூர் பொறியாளர்கள் கழகத்தைச் சேர்ந்த 'பெருமைமிகு பொறியாளர் சாதனை விருது' வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தற்காலிக கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் அந்த விருதை வழங்கினார்.

அரசாங்க அமைப்புகள், ஆய்வு நிலையங்கள், தனியார் நிறுவனங் கள் ஆகியவற்றைச் சேர்ந்த இதர 12 குழுக்களுக்கும் அந்த வரு டாந்திர விருது வழங்கப்பட்டது. வீவக உருவாக்கி இருக்கும் பொங்கோல் நீர்நிலை, சிராங்கூன், பொங்கோல் நீர்த்தேக்கங்களை இணைக்கிறது. இந்த நீர்நிலை இப்பொழுது இருக்கின்ற, இனி மேல் கட்டப்படவிருக்கும் அர சாங்க அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளின் நடுவே செல் கிறது.
பொங்கோல் நீர்நிலையில் எப்பொழுதாவது பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் இடம்பெறுவ துண்டு. நீர்நிலை நெடுகிலும் கரைகளில் 6,000 சதுரமீட்டர் நிலப்பரப்பில் 35 வகையான சிற் றினத் தாவரங்களைத் தான் நட்டி ருப்பதாக கழகம் தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கை யைச் சிறப்புமிக்கதாக ஆக்க இடைவிடாமல் புதுப்புது தீர்வு களைக் கண்டுவரும் கழகத்தின் பொறியாளர்களை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாக வீவகவின் தலைமை நிர்வாகி சியோங் கூன் ஹியன் கூறினார்.

வீவகவின் ஆகப் புதிய சாதனை பற்றி கருத்துத் தெரி வித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், "புத்தாக்கம் மூலமாக அக்கம்பக்கங்களில் தாவர வளத்தைப் பெருக்கி பேட் டைகளில் வாழ்க்கைத் தரத்தை வீவக மேம்படுத்துகிறது," என்று தமது வலைப்பதிவில் குறிப்பிட்டி ருக்கிறார்.
பொங்கோல் நீர்நிலை நெடு கிலும் காணப்படும் சதுப்புநிலத் தாவரங்களும் மிதக்கும் ஈரநில மேடைகளும் அந்த வட்டார வாசி களுக்குப் பசுமைமிக்க, அமைதி சூழ்ந்த சோலையாகத் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்தகைய பசுமைச் சூழலில் 92 சிற்றினப் பறவைகள், 11 சிற்றின வண்ணத்துப்பூச்சிகள், 17 சிற்றின தட்டான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் இந்த நீர்நிலையை தங்கள் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே, தனது பசுமைப் புத்தாக்கங்களை பிடடாரி, தெம் பனிஸ் நார்த் போன்ற இதர புதிய குடியிருப்புப் பேட்டைகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாக வீட கழகம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!