ஊழியர்கள் கள்ளத்தனமாக தருவிப்பு: 44 பேர் கைது

வெளிநாட்டு ஊழியர்களைச் சட்ட விரோதமாக சிங்கப்பூருக்குள் தருவித்த ஒரு கும்பல் முறியடிக் கப்பட்டதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தக் கும்பலைப் பிடிக்க சென்ற வாரம் தீவு முழுவதும் இரண்டு நாள் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச் சின் செய்தி அறிக்கை குறிப்பிட் டது. அலுவலகங்கள், வீடுகள், கட் டுமானத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள் ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் அறுவரும் 38 வெளிநாட்டு ஊழியர்களும் அதில் உள்ளடங்குவர். வேலை அனு மதிச் சீட்டுகள், ஊழியர்களின் பெயர்ப் பட்டியல்கள், சிங்பாஸ் மறைச்சொல் கருவிகள் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அமைச்சு கூறியது.

இத்தகைய கும்பல்கள் எவ் வாறு செயல்படுகின்றன என்பது பற்றி விளக்கமளித்த அமைச்சு, பெயரளவிலான வெற்று நிறுவ னங்கள் அமைக்கப்படுவதும், நிறு வனம் என்ன தொழில் செய்கிறது என்பது பற்றி எந்த விவரமும் அறியாதவர்கள் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்படு வதும் வழக்கம் என்று கூறியது. பிறகு, நிறுவன இயக்குநர் களின் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி வேலை அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்யப்படு கிறது. இவ்வாறு தருவிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து கும்பல்கள் பெருந்தொகைகளைப் பெற்றுக்கொள்கின்றன. ஆனால், உண்மையில் வேலை எதுவும் இல்லாததால், வெளிநாட்டு ஊழியர்கள் சொந்தமாக வேலை தேடிக்கொள்ள விடப்படுகின்றனர். இந்த வெளிநாட்டு ஊழியர்களில் பலரும் சிங்கப்பூரில் தங்குவதற்கு வேலை அனுமதிச்சீட்டு பெறுவதற் காகக் கும்பலுக்குப் பணம் கொடுத்து கும்பலோடு சேர்ந்து மோசடி செய்கிறார்கள். கும்பலின் மூலமாக வேலை அனுமதிச் சீட்டு கிடைத்தவுடன், சட்டவிரோத வழி களில் சொந்தமாக வேலை தேடிக் கொள்கின்றனர். "வேலை எதுவும் இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களைத் தரு வித்து அவர்கள் சொந்தமாக வேலை தேடிக்கொள்ள அனும திக்கும் செயலை மனிதவள அமைச்சு கடுமையாகக் கண்டிக் கிறது.

இரண்டு நாள் நடவடிக்கையில் சிக்கிய கள்ளத்தனமான வெளிநாட்டு ஊழியர்களைத் தருவிக்கும் கும்பலிடம் காணப்பட்ட வொர்க் பெர்மிட் அட்டைகளும் வெளிநாட்டு ஊழியர் பெயர்ப் பட்டியலும். படம்: மனிதவள அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!