‘ஏஜிஓ’ அறிக்கைக்கு தற்காப்பு அமைச்சின் விளக்கம்

தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் அண்மை­யில் வெளி­யிட்ட அறிக்கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த இரு விவ­கா­ரங்களுக்­குத் தற்­காப்பு அமைச்சு விளக்­க­ ம­ளித்துள்ளது. ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் உள் தணிக்கைகளுக்குத் துணை யாகத் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் நடத்தும் வருடாந்தர வெளி தணிக்கையைத் தற்காப்பு அமைச்சு வரவேற்றது. தற்­காப்பு அமைச்சு அதன் நடை­முறை­களை மறு­ஆய்வு செய்­ய­வும் அடை­யா­ளம் காணப்­பட்ட பிழை­களுக்கு விளக்­க­ம­ளிக்­க­வும் குறை­பாடு­களைச் சரி­செய்து சீரிய ஆளுமையை உறு­திப்­படுத்­த­வும் பொது நிதி, வளங்கள் ஆகி­ய­வற்­றின் நிர்­வா­கத்­தில் முறையான இடர் கட்­டுப்­பாடு­களை­யும் வெளிப் ­படை­யான பொறுப்­பேற்பை­யும் நிலை­நாட்­ட­வும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் தணிக்கை­கள் தற்­காப்பு அமைச்­சுக்கு வழி­கோ­லு­வ­தா­கக் கூறி னார் தற்­காப்பு அமைச்­சின் துணைச் செய­லா­ளர் (நிர்­வா­கம்) ஹான் நெங் சியூ.

முத­லா­வ­தாக, சேமிப்பு, ஊழியர் ஓய்­வுக்­கா­லம், பிரி­மி­யம் (சேவர்=பிரி­மி­யம்) நிதித் திட்­டத்­தின்­கீ­ழான $50.26 மில்­லி­யன் முத­லீட்­டுக்­கு 'சேவர்=பிரி­மி­யம்' நிதியின் அறங்கா­வ­லர் மன்றத்தி லி­ருந்து திட்­ட­வட்­ட­மான அங்­கீ­கா­ரம் பெறப்­ப­ட­வில்லை என்று தலைமைத் தணிக்கையாளர் அலு­வ­ல­கம் கண்­டு­பி­டித்­தது.

இலக்கு உத்­தி­யாக நிலச்­சொத்து முத­லீட்டு டிரஸ்­டு­களில் (ஆர்இஐடி) முதலீடு செய்­வதற்கு அறங்கா­வ­லர் மன்றம் ஏற்­ கெ­னவே அங்­கீ­கா­ரம் அளித்­தி­ருந்த­தா­க­வும் மேற்­கு­றிப்­பிட்ட முத­லீட்டைச் செய்­வதற்கு இந்த அங்­கீ­கா­ரம் போது­மா­ன­தென முத­லீட்­டுப் பிரிவு கரு­தி­ய­தா­க­வும் தற்­காப்பு அமைச்சு ஏற்­கெ­னவே தலைமைத் தணிக்கையாளர் அலு­வ­ல­கத்­ தி­டம் விளக்­க­ம் அ­ளித்­தது. ஆயினும், குறிப்­பி­டப்­பட்ட 'ஆர்இஐடி' பங்­குச்­சந்தை நிதியில் முதலீடு செய்­வதற்­கும் பரி­வர்த்­தனையைக் கையா­ளு­வதற்கு முத­லீட்டு நிர்­வா­கியை நிய­மிப்­ப­தற்­கும் அறங்கா­வ­லர் மன்றம் திட்­ட­வட்­ட­மான அங்­கீ­கா­ரம் அளிக்­க­வேண்­டும் என்று தலை மைத் தணிக்கையாளர் அலு­வ­ல­கம் கரு­தி­யது.

அதனைத் தொடர்ந்து, முத­லீட்டு நிர்­வா­கியை நிய­மிக்க அறங்கா­வ­லர் மன்ற­த்தின் அங்­கீ­கா­ரத்தைத் தற்­காப்பு அமைச்­சு பெற்­று­விட்­டது. அறங்கா­வ­லர் மன்றத்தின் நடப்­புக் கட்­டளை­களை தேவை ஏற்படும்போது தற்­காப்பு அமைச்சு மறு­ஆய்வு செய்து சீரமைக்­கும். இரண்டா­வ­தாக, சிங்கப்­பூர் ஆயு­தப்­படை ஊழி­யர்­களுக்­கான முழு சேமிப்­புக் கூட்டு ஊக்கத் தொகைக்கு (எஃப்எஸ்விபி) தற்­காப்பு அமைச்சு மத்திய சேமநிதி சந்தா செலுத்­தவில்லை என்று தலைமைத் தணிக்கையாளர் அலு­வ­ல­கம் சுட்­டிக்­ காட்­டி­யது. 'சேவர்' ஓய்­வு­கா­லத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­கவே 'எஃப்எஸ்விபி' ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்­பட்டு, அது­பற்றி ஊழி­யர்­களி­டம் தெரி­யப்­படுத்­தப்­பட்­ட­தா­கத் தற்­காப்பு அமைச்சு விளக்­க ­ம­ளித்­தது. குறைந்த­பட்ச சேவை காலத்­திற்­குப் பிறகு வழங்­கும் வகையில் 'எஃப்எஸ்விபி' ஊக்கத் தொகைத் திட்­டத்தைத் தற்­காப்பு அமைச்சு வடி­வமைத்­தி­ருந்தது.

தேவையான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்யாத வர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது. ஆனால், தலைமைத் தணிக்கையாளர் அலு­வ­ல­கத்­தின் கண்­ணோட்­டத்­தில், வேலை செய்யும் தொழி­லா­ளர்­களுக்­குச் செலுத்­தப்­படும் எல்­லா­வகை ஊக்கத்தொகைகளுக்கும் மத்திய சேமநிதி சந்தா செலுத்­து­வது கட்­டா­ய­மா­கக் கரு­தப்­படு­கிறது. இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை ஓய்வுகாலம் வரை நீட்டிக்கலாமா எனத் தற்காப்பு அமைச்சு உள் பரிசீலனை செய்தது. ஆனால், ஊழியர்களைத் தக்க வைக்க இத்திட்டம் உதவியதால் திட்டத்தை நிலைநாட்ட அமைச்சுத் தீர்மானித்தது. எனவே, ஏற்­கெ­னவே செலுத்­தப்­பட்ட 'எஃப்எஸ்விபி' ஊக்கத் தொகைக்கு உரிய மத்திய சேமநிதி சந்தாவை அமைச்சு செலுத்­தும். தலைமைத் தணிக்கையாளர் அலு­வ­ல­கம் எழுப்­பிய விவ­கா­ரங்களுக்­குத் தற்­காப்பு அமைச்­சு தீர்வு கண்­டு­விட்­டதாகக் கூறிய துடன் நிறுவன ஆளுமை­ யி­லும் பொது­மக்­களி­டம் பொறுப் பேற்­ப­தி­லும் உயர் தரங்களை அடை­வ­தில் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தாக அமைச்சு வலி­யு­றுத்­ தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!