மக்களுக்குத் தொடர்ந்து தகவல் எடுத்துரைக்கப்படும்

ப. பாலசுப்பிரமணியம்

அரசாங்கம் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் பற்றிய விவரங்கள் பொதுமக்களை எளிய முறையில் சென்றடைய வேண்டும். அதன் நுணுக்கங்களை அவர்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் நேற்று முன்தினம் இரவு மக்கள் கழக சமூக 'காப்பி டாக்' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது.


உட்லண்ட்ஸ் கேலக்ஸி சமூக மன்றத்தில் நடந்த இக்கலந்துரை யாடல் தமிழில் நடத்தப்பட்டது.
தமிழ் முரசின் செய்தி ஆசிரியர் திரு வீ. பழனிச்சாமி கலந்துரை யாடலை வழிநடத்த, தமிழ் முரசின் துணை செய்தி ஆசிரியர் திரு தமிழவேல் முதியோர் சுகாதாரம், மூத்தோருக்கான வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் திட்டங்கள், மத்திய சேமிநிதிக் கழகத்தின் 'எல்டர்ஷீல்ட்' திட்டம், சுகாதார அமைச்சின் 'மெடிஷீல்ட் லைஃப்' திட்டம் ஆகியவற்றுடன் மூத்தோ ருக்கான இதர அரசாங்கத் திட் டங்களை விளக்கினார்.


அதன் பிறகு இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில், செம்ப வாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்வி களுக்குப் பதிலளித்தார்.
'மெடிஷீல்ட் லைஃப்' காப்புறு திச் சந்தா குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதோடு முதியோ ருக்கான வெவ்வேறு திட்டங்க ளுக்கு எப்படித் தகுதி பெறுவது என்ற தகவல்களையும் பங்கேற் பாளர்கள் அறிந்துகொண்டனர்.
கேள்வி பதில் அங்கத்தில், "மருத்துவமனையின் விபத்து, அவசரப் பிரிவில் அனுமதி கட் டணத் தொகை ஏன் $100க்கும் மேலாக இருக்கிறது என்றும் அப் படி முதியவர் ஒருவர் கீழே விழுந்து அங்கு செல்லுகையில் அவரிடம் அவ்வளவு பணம் இல் லாமல் இருந்தால் என்ன செய் வது," எனும் கேள்வியை ஒரு பங் கேற்பாளர் எழுப்பினார்.


முதலில் அவசரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அப்பிரிவு சேவை வழங்குகிறது என்றும் அப்படி அவசரம் இல்லையென்றால் அங்கு செல்வதைத் தவிர்க்கும் நோக்கில் அனுமதிக் கட்டணம் அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. அதோடு எல்லா வயதினருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் விதிக் கும்போது அது அப்பிரிவின் செயல்பாட்டு நிர்வாகத்திற்கு உதவுகிறது என்று தெரிவிக்கப் பட்டது.


பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சை நிராகரிக்கப்படாது என் றும் கட்டணத்தைச் செலுத்த முடி யாதவர்கள் மருத்துவமனையின் சமூக ஊழியர்களிடம் இதன் தொடர்பில் உதவி கேட்கலாம் என்றும் விவரிக்கப்பட்டது.
"மக்களுக்கு அரசுத்திட்டங் களை இப்படி கலந்துரையாடல் மூலம் புரியவைப்பதுதான் சிறந்த வழி. கேள்வி பதில் அங்கத்தில் திரு நாகராஜன் எனும் முதியவர் 86 வயதிலும் தொடர்ந்து வேலை செய்வதாகக் கூறினார். இது மற்ற முதியவர்களைச் சிந்திக்க வைக் கிறது, ஊக்கமும் அளிக்கின்றது," என்று தெரிவித்தார் கணக்காள ராகப் பணியாற்றும் திரு அப்துல் ஹசான், 68.
கலந்துரையாடலில் பங்கேற்ற 28 வயது குமாரி நந்தினி, தம் பாட்டியின் சார்பில் சில கேள்வி களைக் கேட்டார்.
தம் பாட்டி முன்னோடித் தலைமுறையினர் என்றும் அவர் இதுவரை வேலைக்குச் சென்ற தில்லை என்றும் அதனால் அவ ருக்கு மெடிசேவ் கணக்கில் பணம் இல்லாததால் மருத்துவச் செலவு களுக்குச் சிரமப்படுகிறார் என்னும் ஒரு குறைபாட்டை முன் வைத்தார்.


அதற்குப் பதிலளித்த மக்கள் கழகத்தின் முன்னோடித் தலை முறைத் தூதுவர் ஒருவர், நந்தினி யின் பாட்டிப் போன்று இதுவரை வேலைக்குச் செல்லாமல் இருந்த வர்களுக்கும் அரசாங்கம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் களின் மெடிசேவ் கணக்கில் பணம் நிரப்பிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் கூட அவரது மெடிசேவ் கணக்கில் பணம் நிரப் பப்பட்டிருக்கலாம் என்று விளக்கினார்.
இது பற்றி அறிந்து மகிழ்ச்சி யடைந்த நந்தினி, இது பற்றி இது வரை தங்களுக்குத் தெரியாது என்றும் இந்தக் கலந்துரையாட
லின் இந்த முக்கிய தகவலை அறிந்துகொண்டதன் மூலம் மன நிறைவடைவதாகக் கூறினார்.


கடந்த மாதத்திலிருந்து சீன, ஆங்கில, மலாய் மொழிகளிலும் இந்த 'காப்பி டாக்' கலந்துரையாடல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கழகம், மனிதவளம், நிதி அமைச்சுகளின் ஏற்பாட்டில் தமிழ் முரசு ஆதரவுடன் நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.
"இதுபோன்ற கலந்துரையாடல் மூலம் அரசாங்கத் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எளிதில் தெரி விக்க முடியும். தகவல்களை மக்க ளுக்குத் தெரிவிப்பதில் அடித்தளத் தலைவர்களின் பங்கும் இதில் மிக முக்கியமானது," என்றார் திரு விக்ரம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!