செப். 4ல் தொடங்கும் ‘கோ எஹெட்’ பேருந்துச் சேவைகள்

பாசிர் ரிஸ், பொங்கோல் வட்­டா­ர­வா­சி­கள் அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் 'கோ எஹெட்' பேருந்­துச் சேவை­களில் (படம்) பயணம் செய்­ய­லாம்.
சிங்கப்­பூ­ரின் ஆகப் புதிய பேருந்து நிறு­வ­ன­மான 'கோ எஹெட்', லோயாங் பேருந்துச் சேவை தொகுப்பை 25 பேருந்­துச் சேவை­களு­டன் தொடங்­ கும்.
முதல் கட்­ட­மாக 13 பேருந்துச் சேவைகள் அறி­மு­கம் காணும். பின்னர், இரண்டா­ம் கட்­ட­மாக 11 பேருந்­துச் சேவைகள் செப்­டம்பர் 18ஆம் தேதி அறி­மு­கப்படுத்தப் படும். அதன் 25வது பேருந்­துச் சேவை அடுத்த ஆண்டு அறி­மு­ க­மா­கும்.
இந்தத் தக­வல்­களை நிலப் ­போக்­கு­வ­ரத்து ஆணையத்துடன் இணைந்து 'கோ எஹெட்' நிறு­வ­னம் நேற்று அறி­வித்­தது.
பேருந்­துச் ­சேவை­களின் தரத்தை மேம் படுத்­தும் நோக்கில் அர­சாங்கத்­தின் பேருந்து தொழில்­துறை­யில் மறு­சீ­ரமைப் புத் திட்­டத்­தின்கீழ்ப் பேருந்து சேவை களை வழங்­கும் இரண்டா­வது வெளி­நாட்டு நிறு­வ­னம் 'கோ எஹெட்.'
பிரிட்­ட­னின் 'டவர் டிரான்­சிட்' நிறு­வ­னம் அதன் சேவையை மே மாதம் தொடங்­ கி­யது.
"கோ எஹெட் நிறுவனத்தின் இந்தச் சேவை மாற்ற கால­கட்­டத்­தில் பேருந்து நிறு­வ­னங்களு­டன் இணைந்து பய­ணி­களுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய இடை­யூறு­களைக் குறைப்­ப­து­டன் சுமு­க­மான பய­ணத்தை வழங்கக் கடமை கொண்­டுள்­ளோம்," என்றார் நிலப்போக்குவரத்து ஆணையத் தின் தலைமை நிர்வாகி சியூ மென் லியோங்.
பயணப் பாதைகளையும் பயண நேர அட்டவணைகளையும் பற்றி அறிந்துகொள்ள பேருந்து களிலும் போக்குவரத்து முனை யங்களிலும் வைக்கப்படவிருக் கும் விளம்பர வெளியீடுகளை பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று 'கோ எஹெட்' நிறுவனம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!