தேசிய தின அணிவகுப்பு, ரியோ ஒலிம்பிக் போட்டி தொடர்பிலான புதிய அஞ்சல்தலைகள் வெளியீடு

சிங்கப்­பூர் தேசிய தின அணி­ வ­குப்­பின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்­கும் பொருட்டு 'சிங்போஸ்ட்' வரும் திங்கட்­கிழமை புதிய அஞ்சல்தலை தொகுப்பை வெளி­யி­டவுள்ளது. ஒரு தொகுப்­பில் ஏழு அஞ்சல் தலைகள் இருக்­கும். ஒவ்வோர் அஞ்சல்தலையும் வெவ்வேறு கால­கட்­டங்களில் நடை­பெற்ற தேசிய தின அணி­வ­குப்பைப் பிர­தி­ப­லிக்­கும். 'ஃபர்ஸ்ட் லோக்கல்', 'செகண்ட் லோக்கல்', 60 காசு, 70 காசு, 90 காசு, $1.30 ஆகிய விலைப் பி­ரி­வு­களில் அஞ்சல் தலைத் தொகுப்பு விற்­பனைக்­குக் கிடைக்­கும்.

மேலும், ரியோ 2016 ஒலிம்­பிக் போட்­டி­களை முன்­னிட்டு 'சிங்போஸ்ட்' நான்கு வடி­வமைப்­பு­கள் அடங்­கிய ஒரு சிறப்பு அஞ்சல்­தலைத் தொகுப்பை நேற்று வெளி­யிட்­டது. நீச்சல், மேசைப்­பந்து, துப்பாக்கி சுடுதல், படகோட்டம் ஆகிய போட்­டி­களைப் பிர­தி­ப­லிக்­கும் வடி­வங்க­ ளாக இந்தத் தொகுப்பு வெளியீடு கண்டது. 'ஃபர்ஸ்ட் லோக்கல்', 70 காசு, 90 காசு, $1.30 ஆகிய பிரி­வு­களில் அஞ்சல்தலைத் தொகுப்பைப் பெறலாம். இந்த அஞ்சல்தலைத் தொகுப்­பு­கள் அனைத்­தும் எல்லா அஞ்சல­கங்களி­லும் சிங்கப்­பூர் அஞ்சல்­தலை அரும்­பொ­ரு­ள­கத்­தி­லும் விற்­பனைக்கு கிடைக்­கும். www.st­a­mp­d­e­li­g­ht.com இணை­யத்­த­ளத்­தி­லும் அஞ்சல்­தலை­ களை வாங்­கிக்­கொள்­ள­லாம்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி வெளியீடு காணும் அஞ்சல்தலைகள். படங்கள்: சிங்போஸ்ட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!