எட்டு உணவகங்களுக்கு ஒரே சமையல் மையம்: புதிய தொடக்கம்

வில்சன் சைலஸ்

மனிதவள பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் நோக் கில் எட்டு உணவகங்கள் ஒன் றிணைந்து மத்திய உணவு தயா ரிக்கும் மையத்தை நேற்று தொடங்கி வைத்தன. இத்துடன் உள்ளூர்வாசிகளுக்கும் கூடுதல் வேலை வாய்ப்புகளை மையம் வழங்குகிறது. சிங்கப்பூர் இந்திய உணவ கங்கள் சங்கத்தின் (ஐராஸ்) கீழ் செயல்படும் எட்டு உணவகங் களின் முயற்சியில் உருவான 'கிச்சன் சொல்யூஷன்ஸ்' நிறுவ னம் துவாஸ் பே வாக்கில் தனது முதல் உணவு தயாரிக்கும் மை யத்தை நிறுவியது. அசைவ உண வகங்களுக்கான முதல் உணவு தயாரிக்கும் மையம் இது.

நூற்றுக்கணக்கான வெங்கா யம், உருளைக்கிழங்கு ஆகியவற் றின் தோலை ஒரே நேரத்தில் சீவுதல், காய்கறிகள், இறைச்சி நறுக்குதல், இரண்டு மணி நேரத் தில் 300 லிட்டர் குழம்பு தயாரித் தல் உட்பட பாத்திரங்களைக் கழு வுவதற்கும் இங்கே தானியங்கி எந்திரங்கள் பயன் படுத்தப்படுகின் றன. சுடச்சுட தயாரிக்கப்படும் உணவு உடனடியாக குளிர் சாதனப் பெட்டிக்குள் பதனப் படுத்தப்படுவதால் கிட்டத்தட்ட ஒருவாரம் வரை அவற்றைக் கெடாமல் பாதுகாக்கும் வசதி களை மையம் கொண்டுள்ளது. வெவ்வேறு உணவகங்கள் இந்த உணவு தயாரிக்கும் மை யத்தைப் பயன்படுத்தினாலும் அவற்றின் சமையல் குறிப்புகள் ரகசியமாகவே பாதுகாக்கப்படுவ தற்கான முறைகளையும் மையம் கையாள்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!