நவீன கொண்டாட்டமாக மன நிறைவளித்த அணிவகுப்பு

ப. பாலசுப்பிரமணியம், வில்சன் சைலஸ்

கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து தேசத்தின் பிறந்தநாளைக் கொண் டாடுவதற்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. அதை அனுபவிக்க தீவின் பல பகுதிகளிலிருந்து காலாங்கில் உள்ள தேசிய விளை யாட்டரங்கிற்கு நேற்று முன்தினம் திரண்டு வந்தனர் பல்லாயிரக்க ணக்கான பார்வையாளர்கள். சிங்கப்பூரின் பொன்விழாவைத் தொடர்ந்து தேசத்தின் 51வது பிறந்தநாளை இன்னும் சிறப்பான வகையில் கொண்டாட அதிநவீன அங்கங்கள் பல இவ்வாண்டின் கொண்டாட்டத்தில் இடம்பெற்றன. பார்வையாளர்களும் அத்தகைய அங்கங்களால் வசீகரிக்கப்பட்ட தையும் ஆண்டுக்கு ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண் டனர்.

பொன்விழா மகள் மூலம் பொன்னான வாய்ப்பு

சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டில் பிறந்த மகளால் திருமதி தேன் மொழி குடும்பத்துக்குத் தேசிய தின அணிவகுப்பை நேரில் காணும் அறிய வாய்ப்பு நேற்று முன்தினம் கிடைத்தது. அணி வகுப்பைக் காண கடந்த ஐந்து ஆண்டுகளாக குலுக்கல் முறை யில் முயன்ற இவருக்கு இவ்வாண் டுதான் அதிர்ஷ்டம் கைக் கூடியது. முன்னாள் ராணுவ வாரண்ட் அதிகாரியான தாயார் திருமதி கல்யாணி, இரு பிள்ளைகள் ஆகி யோருடன் மாலை 4 மணிக்கெல் லாம் தேசிய விளையாட்டரங் கிற்கு வந்த திருமதி தேன்மொழி, 30, பழைய தேசிய விளையாட் டரங்கில் நடைபெற்ற அணிவகுப் பைவிட இவ்வாண்டின் அணி வகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்தது என்றார். "அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு நிகழ்ச்சிகளுக்கு மெரு கேற்றியது," என்ற திருமதி தேன் மொழி, ஒரு வயது மகளுடன் தேசத்தின் 51வது பிறந்தநாளைக் கொண்டாடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.

நாட்டின் பொன்விழா ஆண்டில் பிறந்த மகள் மூலம் கிடைக்கப்பெற்ற நுழைவுச் சீட்டுகளின் மூலம் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பைக் காண வந்திருந்தார் திருமதி தேன்மொழி (வலது). உடன் அவரது தாயார் திருமதி கல்யாணி, மகன் பிரசாந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!