ஆற்றல் மிகுந்த தலைவர்கள், பொறுப்புள்ள மக்கள் தேவை

சிங்கப்பூர் கடந்த காலத்தைப் போலவே வருங்காலத்திலும் வெற்றியடைய நல்ல தலைமைத் துவம் மிக முக்கியம் என்று ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் வலியுறுத்தி கூறியிருக்கிறார். அந்தத் தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றி மக்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய விவேகமான தலைவர்களும் நாட்டின் விவகாரங் களில் ஈடுபாட்டு உணர்வுடன் திகழும் குடிமக்களும் சேர்ந்து செயல்பட்டால் சிங்கப்பூருக்கு அருமையான எதிர்காலம் நிச்சயம் என்றார் அவர். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; கனவுகளை நன வாக்குங்கள்; பொருள்பொதிந்த வாழ்க்கை வாழுங்கள்; சிங்கப் பூருக்கு பெருமை சேருங்கள்; என்று திரு கோ குறிப்பிட்டார். சவால்களைச் சமாளித்து வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் சிங்கப்பூரர்கள் தேவையானவற்றைக் கைக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

திரு கோ நேற்று இரவு மரின் பரேட் தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். சிங்கப்பூருக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தலைவர் கள் எப்படிஎப்படியெல்லாம் திகழ வேண்டும் என்பதையும் மக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் தமது உரையில் திரு கோ விளக்கினார். சிங்கப்பூரின் எதிர்கால தலை வர்கள் பிரச்சினைகளைச் சமா ளித்து மீண்டு வந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான ஆற்றல், கற்பனைத்திறனுடன் திகழ வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!