உடலுறுதிப் பயிற்சியில் பங்கேற்ற 1,000 டாக்சி ஓட்டுநர்கள்

டாக்சி ஒட்­டு­நர்­கள் பல மணி நேரம் வாக­னத்தை இடை­வி­டா­மல் ஓட்­டு­வ­தால் உடல் உபாதை­களுக்கு ஆளா­கிறார்­கள். அவர்­கள் துடிப்­பான, ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறையை மேற்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக 'கம்ஃபர்ட்­டெல்குரோ' நிறு ­வ­னம் நேற்று கூட்­டுப்­ ப­யிற்­சிக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தது. அந்நிறு­வ­னத்தைச் சேர்ந்த சுமார் 1,000 டாக்சி ஒட்­டு­நர்­களும் அவர்­களின் குடும்பத்­தி­ன­ரும் இந்தக் கூட்­டுப் ­ப­யிற்­சி­யில் கலந்து கொண்ட­னர். அதன் பின் னர் 20 நிமி­டங்களுக்குத் துரித நடைப்­ ப­யிற்­சி­யி­லும் ஈடு­பட்­ட­னர். புக்கிட் கோம்பாக் விளை­யாட் ­ட­ரங்­கில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் அலு­வ­லக மூத்த துணை அமைச்­சர், வெளி­யு­றவு; போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஜோச­ஃ­பின் டியோ சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து ­கொண்டார்.

உடற்­ப­யிற்­சி­க்குப் பிறகு பேசிய அவர், "நமது டாக்சி ஒட்­டு­நர்­கள் அன்றா­டம் அமர்ந்து தங்கள் பணியில் ஈடு­பட்டு வரு­கிறார்­கள். களைப்­பா­றும் நேரம் தவிர அவர்­கள் எந்தவிதமான நடவடிக்கை யிலும் ஈடுபடுவ­தில்லை. ''கம்ஃபர்ட்­டெல்குரோ' நிறு­வ­னம் அவர்களின் ஓட்­டுநர்­கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறை யைப் பின்­பற்ற பல தரப்­பட்ட நட­வ­டிக்கை­­களுக்கு ஏற்பாடு செய்­து உள்­ளது என்று அறியும்போது மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது,'' என்றார். 'கம்ஃபட்­டெல்­கரோ' நிறு­வ­னம் 'அக்டிவ் எஸ்ஜி'யுடன் இணைந்து நேற்றைய நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தது. தனது ஒட்­டுநர்­கள் துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை யைப் பின்பற்ற நிறுவனம் மேலும் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

'கம்ஃபர்ட்­டெல்குரோ' நிறுவனத்தின் அதிகாரிகள், டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோருடன் நேற்றுக் காலை உடலுறுதிப் பயிற்சியில் ஈடுபட்டார் மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: கம்ஃபர்ட்­டெல்குரோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!