அமைச்சர் டெஸ்மண்ட் லீ: நகர மன்றங்கள்

ஒப்படைப்பு நடைமுறை மறுபரிசீலனை தேர்தலுக்குப் பிறகு நகர மன்றங்களை ஒப்படைக்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். நகர மன்றங்கள் சட்டம் மறு பரிசீலனை செய்யப்பட்டு வருவ தாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த நடைமுறையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாட்டாளிக் கட்சி நிர்வகித்து நடத்தும் அல்ஜுனிட் ஹவ்காங் நகர மன்றம் தன்னுடைய ஆளுமை, நிதிக் குறைபாடுகளைச் சரிப்படுத்துவதில் முன்னேற்றம் காணவில்லை என்றும் அது கவலை தருவதாகவும் மன்றத்தில் அமைச்சர் குறிப்பிட்டார். "தேர்தல் எல்லைகள் மாறும் போது கணக்குகளும் பத்திரங் களும் ஒப்படைக்கப்படுவது தாமதம் அடைந்தால் அவற்றைப் பெறக்கூடிய நகர மன்றத்தின் நிதித் தணிக்கை பாதிக்கப்படக் கூடும். இதுபற்றி பரிசீலிக்க வேண்டியது தேவையான ஒன்றாக இருக்கிறது," என்று திரு லீ குறிப்பிட்டார்.

மேல் விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. அல்ஜுனிட் ஹவ்காங் நகர மன்றத்தின் கணக்குத் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி பல விவ காரங்களை அடையாளம் கண் டிருக்கிறது. பாட்டாளிக் கட்சி நகர மன்றத்தின் செயல்முறை ஏற்பாடு கள் தோல்வியடைந்திருப்பதையும் நடத்தைகள் கவலை தரக்கூடிய அளவுக்கு இருப்பதையும் அந்த நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது என்று திரு லீ தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!