அமைச்சர்: விரிசல் ஏற்பட்ட ரயில்களை தயாரித்த நிறுவனம்

அடுத்தடுத்த ஒப்பந்தங்களை முறையாகப் பெற்றது கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு விரிசல்கள் காணப்பட்ட 26 ரயில் வண்டிகளைத் தயாரித்த ஜப்பானிய=சீன கூட்டு நிறுவனம் தொடர்ந்தாற்போல் குத்தகைகளை நியாயமாகப் பெற்றது என்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் விளக்கினார். ரயில் வண்டிகளில் குறைபாடு கள் இருப்பது தெரியவந்ததும் கவசாக்கி=சிஃபாங் என்ற அந்தக் கூட்டு நிறுவனம் செயல்பட்ட விதம் சிறப்புமிக்கதாக இருந்தது என்றார் அமைச்சர். "எல்லா செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது. மற்ற ரயில்களுக்கான இதர குத்தகைகளுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டபோது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது," என்றார் அமைச்சர்.

ரயில் ஏலக்குத்தகைகள் எல்லாமே ஒளிவுமறைவு இல்லாத விதத்தில்தான் எப்போதுமே இடம் பெறுகின்றன. தரம், விலை அடிப் படையில் அவை தீர்மானிக்கப்படு கின்றன. இந்த ஜப்பான்=சீன கூட்டு நிறுவனம் அடுத்தடுத்த ஒப்பந்தங்களை நியாயமான முறையில் பெற்றது என்று அமைச் சர் விளக்கினார். இதற்கிடையே, சீனாவில் தயா ரிக்கப்பட்ட 26 எம்ஆர்டி ரயில் களில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு விரிசல்கள் காணப்பட் டதையடுத்து அந்த ரயில்கள், தயாரிப்பு நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன.

கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு விரிசல்களைக் கொண்ட 26 ரயில் வண்டிகளை வழங்கிய ஜப்பானிய=சீன கூட்டு நிறுவனம், தொடர்ந்தாற் போல் குத்தகை களை நியாய மாகப் பெற்றது என்று போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!