கோ: ரயிலில் வாயுக்கசிவுக்கு குளிர்சாதன கோளாறு காரணம்

தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலை யத்தில் ஒரு ரயில் வண்டியில் திங்கட்கிழமை பிற்பகல் நேரத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டது. அந்த ரயிலின் குளிரூட்டிச் சாதனத்தில் எண்ணெய் ஒழு கியதே வாயுக்கசிவுக்கு காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். குளிரூட்டிச் சாதனத்தில் எண்ணெய் ஒழுகியதால் அந்தச் சாதனம் அளவுக்கு அதிகமாகச் சூடாகிவிட்டது. அதனால் அதிலிருந்து வாயு ஆவியாகி வெளியாகியது என்று அவர் தெரிவித்தார்.

பொத்தோங் பாசிர் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சீத்தோ யி பின் கேட்ட கேள் விக்குப் பதிலளித்த அமைச்சர், குளிர்சாதனத்தில் எண்ணெய் ஒழுகியது எதனால் என்பது பற்றி பொறியாளர்கள் பரிசோதிப் பார்கள் என்றும் அந்தச் சாதனம் 10 நாட்களுக்கு முன் கடைசி யாகச் சோதிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். சம்பவம் நிகழ்ந்த ரயில் கவசாக்கி நிறுவனம் தயாரித்த முதல் தலைமுறை ரயிலாகும்.

தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் வண்டியில் இருந்த பயணிகள் வாயுக்கசிவு காரணமாக பாதிக்கப்பட்டதை இந்த காணொளி காட்டுகிறது. படம்: சோபியா கீ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!