பேருந்து நிறுத்தத்தில் இலவச இணையம், ஊஞ்சல் இருக்கை...

ஜூரோங் ஈஸ்ட்டில் ஒரு புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நேரம் போவது தெரியாமல் பல வசதிகளை அனுபவிக்கலாம். ஊஞ்சல் போன்ற இருக்கை யில் அமர்ந்து ஆடியபடியே இலவசமாக இணையத்தில் பலவற்றையும் பார்க்கலாம். செல்பேசிக்கு மின்சாரம் ஏற்றிக் கொள்ளலாம். இணையத்திலிருந்து புத்தகங்களைப் பதி விறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வளவு வசதிகளைக் கொண்ட பேருந்து நிறுத்தம் ஜூரோங் கேட்வே ரோட்டில் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் அமைந்துள்ளது. புதிய வசதிகளை இந்த மாதம் முதல் ஓராண்டு வரை பயணிகள் அனுபவிக்கலாம். அங்குள்ள கணினிமய அறிவிப்புப் பலகைகள் மூலம் பேருந்து வரும் நேரம், பருவநிலை, முகவரி அமைவிடம் போன்ற பல தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

செப்டம்பர் முதல் இலவச இணையச் சேவை கிடைக்கும். இவை ஒருபுறம் இருக்க, பசுமைக் கூரை, சூரிய சக்தித் தகடுகள், சைக்கிள்களை நிறுத்திவைக்கும் இடங்கள் போன்ற இதர பல வசதிகளும் அங்கு உண்டு. இந்தப் புதிய வசதிகள் பற்றிய தங்கள் கருத்துகளை AUDE@ura.gov.sg என்ற முகவரி மூலம் தெரியப்படுத் தும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய வசதிகளும் சேவைகளும் தொடர வேண்டுமா என்பதை முடிவு செய்ய இது அரசாங்கத்திற்கு உதவும். இத்தகைய புதுப்புது திட்டங்களைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் http://ura.sg/ourfaveplace என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம். அல்லது URA_ourfaveplace@ura.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

பேருந்து நிறுத்தத்தில் செல்பேசி மின்சக்தி ஏற்றும் வசதியும் உண்டு. படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!