நான்கு நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கூட்டுப் பயிற்சித் திட்டம்

சிங்கப்பூர் சுங்கத்துறை, இந்த மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை புருணை, இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளின் சுங்கத்துறை நிர்வாக அதிகாரிகள் 20 பேருக்கு கூட்டுப் பயிற்சி செயல்திட்டம் ஒன்றை நடத்தியது. சிங்கப்பூர் சுங்கத்துறை, இப்படி நான்கு நாடுகளின் அதிகாரிகளைக் கூட்டுப் பயிற்சி செயல்திட்டத் தில் ஈடுபடச்செய்தது இதுவே முதல்முறையாகும்.

ஒவ்வொரு சுங்கத்துறை நிர்வாகத்தின் ஆற்றல்களையும் பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த நான்கு நாடுகளின் சுங்கத்துறைகள் கூட்டாகச் செயல்பட்டு நிர்வாகத்தைத் தொடர்ந்து பலப்படுத்த உறுதி தெரிவிக்கப்பட்டது. இதனையொட்டி இந்த நான்கு நாடுகளின் சுங்கத்துறை நிர்வாகத் தலைவர்களும் நேற்று கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். இந்தக் கூட்டுப் பயிற்சி செயல் திட்டத்தை ஆண்டுதோறும் நடத்துவது என்று அந்த அறிக்கையில் அவர்கள் உறுதி கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!