பாதுகாப்புக்கவசம் பாதுகாப்பான பயணம்

'பாது­காப்­பாக மோட்­டார்சைக்கிளை ஓட்டுக 2016' இயக்­கம் சிங்கப்­பூர் மோட்­டார்சைக்­கிள் நிகழ்ச்­சியை­யொட்டி நேற்று தொடங்கப்­பட்­டது. போக்­கு ­வ­ரத்து போலிசும் சிங்கப்­பூர் சாலை பாது­காப்பு மன்ற­மும் இணைந்து இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்­தி­ருந்தன. உள்துறை அமைச்­சின் நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் அம்ரின் அமீன் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டார். இந்த ஆண்டு நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணையம், வேலை­யி­டப் பாது­காப்பு சுகாதார மன்றம், வேலை­யி­டப் பாது­காப்பு சுகாதாரக் கழகம் ஆகியவை போக்­குவ­ரத்து போலிசுடன் இணைந்து பங்காற்றும். 'பாது­காப்புக் கவசம் அணிவோம்; பாது­காப்­பான பயணத்தை மேற்­கொள்­வோம்' என்பதே இந்த ஆண்டின் கருப்­பொ­ரு­ள்.

மோட்­டார்சைக்­கி­ளோட்­டி­கள் அவர்­களின் பின் இருக்கை­ப் பய­ணி­கள் ஆகியோர் பாது­காப்­பான பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டிய வழி­முறை­களைத் தெரிந்துகொண்டு செயல்­பட இந்த இயக்­கம் உதவும். இந்த ஆண்டு பொருள் விநியோக நிறு­வ­னங்கள் தங்கள் ஊழி­யர்­கள் பாது­காப்புக் கவசம் அணிந்து, பாது­காப்­பான பய­ணத்தை மேற்­கொள்­வார்­கள் என்ற உறு­தி­மொ­ழியை வழங்க ஏற்­பாடு­கள் செய்­யப்பட்­டிருக் கின்றன. பாது­காப்­பான பய­ணத்தை மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­கள் தொடர்ந்து மேற்­கொள்ள வேண் டிய அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தும் வாசகங்கள் அடங்­கிய விளக்குக் கம்பப் பதாகை­கள் தீவு முழு­வ­தும் வைக்­கப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் தெரிவித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!