மாணவர் பராமரிப்பு நிலையத்தில் மானிய முறைகேடுகள்

இம்ப்­ரி­ஸா­ரியோ லர்னிங் லாப் எனும் மாணவர் பரா­ம­ரிப்பு நிலை யம் அர­சாங்கக் கட்டண மானி­யங்களைப் 'பலமுறை' முறை­கே­டா­கக் கோரி­யி­ருப்­பது தெரிய வந்­தி­ருப்­ப­தா­கச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரி­வித்­தது. அண்மை­யில் நடத்­தப்­பட்ட தணிக்கை­யின்­போது முறை­ கே­டான மானியக் கோரிக்கை­கள் கண்ட­றி­யப்­பட்­ட­தாக அமைச்சு நேற்று வெளி­யிட்ட செய்தி அறிக்கைக் குறிப்­பிட்­டது. "இவ்­வி­வ­கா­ரத்தைக் கடுமை­யான கண்­ணோட்­டத்­து­டன் அமைச்­சு கையா­ளு­கிறது. "சிங்கப்பூர் காவல்­துறை­யின் வணிகக் குற்­ற­வி­யல் பிரி­வி­டம் இவ்­வி­வ­கா­ரம் தெரி­யப்­படுத்­தப்­பட்­டுள்­ளது," என்று அறிக்கைக் குறிப்­பிட்­டது. புக்கிட் ஹோ சுவீயில் அமைந்­தி­ருக்­கும் இம்ப்­ரி­ஸா­ரியோ லர்னிங் லாப் 14 நாட்­களுக்­குள் அமைச்­சி­டம் தெளிவான விளக்­க­ ம­ளிக்­க­வேண்­டும்.

அவ்வாறு செய்யத் தவ­றினால், மாணவர் பரா­ம­ரிப்­புக் கட்டண உதவித்­திட்ட நிர்வாகி என்ற தகுதியை இழந்­து­வி­டும். அதற்­கிடை­யில், புதி­தா­கச் சேர்க்­கப்­படும் மாண­வர்­கள் யாருக்­கும் கட்டண உதவிக்கு நிலையம் ஏற்பாடு செய்ய முடியாது. "இந்த நில­வ­ரம் பற்றி விளக்­க­ம­ளிக்­க­வும் எங்க­ளது ஆத­ரவை­யும் உதவியை­யும் வழங்க­வும் இம்ப்­ரி­ஸா­ரியோ லர்னிங் லாப் நிலை­யத்­தில் சேர்ந்­தி­ருக்­கும் பிள்ளை­களின் பெற்­றோர்­களுக்கு அமைச்­சுக் கடிதம் அனுப்­பி­யுள்­ளது," என அறிக்கை தெரி ­வித்­தது. ஜூன் மாதம் நிலை­யத்­தில் சேர்க்­கப்­பட்ட 14 பிள்ளை­களில் 12 பிள்ளை­கள் தற்போது அர­சாங்கத்­தின் கட்டண உதவி பெறு­கிறார்­கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!