நாய்க்குட்டிகளைக் கடத்திய ஆடவருக்கு 6 மாதச் சிறை

மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்கப்­பூ­ருக்கு மூன்று நாய்க்­குட்­டி­களைத் தமது காரில் கடத்­திக்­கொண்டு வந்த 34 வயது ஆட­வ­ருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீன் பண்ணை நடத்­தும் லோ சீ சியாங் தமது காரின் ஒலி­பெ­ருக்­கிப் பெட்­டி­யில் அந்த மூன்று நாய்க்­குட்­டி­களை மறைத்து வைத்து சிங்கப்­பூ­ருக்­குள் கடத்­திக் கொண்டு வர முயன்றார். அந்த நாய்க்­குட்­டி­களுக்கு மயக்க மருந்து கொடுக்­கப்­பட்­டி­ருந்த­தா­க­வும் உட்­லண்டஸ் சோதனைச் சாவ­டியைச் சேர்ந்த குடி­நுழைவு அதி­கா­ரி­கள் அவற் றைக் கண்­டு­பி­டித்­த­போது அவை சுய­நினை­வின்றி இருந்த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

அதனைத் தொடர்ந்து வழக்கு வேளாண் உணவு, கால்நடை ஆணை­யத்­தி­டம் ஒப்­படைக்கப் ­பட்­டது. உரிமம் இல்­லா­மல் உயி­ருள்ள விலங்­கு­களை இறக்­கு­மதி செய்தது, விலங்­கு­களுக்­குத் தேவை­யற்ற துன்பம் விளை­வித்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­களை லோ ஒப்­புக்­கொண்டார். நாய்க்­குட்­டி­களை சிங்கப்­பூ­ருக்­குள் கடத்­திக்­கொண்டு வந்து மார்­சி­லிங்­கில் ஆடவர் ஒரு­வ­ரி­டம் ஒப்­படைத்­தால் தமக்கு 800 வெள்ளி கொடுக்­கப்­படும் என்று ஜோகூர் பாருவில் உள்ள செல்­லப்­பி­ரா­ணிக் கடைக்­கா­ரர் ஒருவர் கூறி­ய­தாக லோ நீதி­மன்றத்­தில் தெரி­வித்­தார்.

செம்ப­வாங்­கில் உள்ள வேளாண் உணவு, கால்நடை ஆணை­யத்­தின் தனிமைப்­படுத்­தும் நிலையத்­தில் கடத்­திக் ­கொண்டு வரப்­பட்ட நாய்க்­குட்­டி­கள் 100 நாட்­களுக்­குத் தனிமைப்­ படுத்­தப்­பட்­டன. நாய்க்­குட்­டி­களை எடுத்து வளர்க்க தகுந்த நபர்­களைக் அடை­யா­ளம் கண்டு அவர்­களி­டம் ஒப்­படைக்க விலங்கு வதை தடுப்­புச் சங்கத்­து­டன் அதி­கா­ரி­கள் செயல்­பட்டு வரு­கின்ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!