பாலாஜி சதாசிவன் பெயரிலான கல்வி விருது விரிவாக்கம்

வளர்ந்து வரும் சமூகப் பராமரிப்புத் துறைக்கு மேலும் பலரை சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களாக ஈர்க்கும் வகையில் புதிய உள்ளூர் நேரடிப் பட்டக் கல்வித் திட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் அமரர் பாலாஜி சதாசிவனின் பெயரிலான கல்வி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இந்தப் புதிய நான்கு ஆண்டு இயன் மருத்துவம், செயல்முறை சிகிச்சை பட்டக் கல்வித் திட்டங்கள் வழங்கப்படு கின்றன. வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற நடுத்தர, நீண்டகாலப் பராமரிப்பு மனிதவள மேம்பாட்டு விருதுகள் விழாவில் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோரிடமிருந்து ஐந்து சமூகப் பராமரிப்பு உபகாரச் சம்பளங்களையும் கல்வி விருதுகளையும் 100க்கும் மேற் பட்ட மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

"சமூகப் பராமரிப்பு தேவைப் படும் பலருக்கு மீண்டும் நடமாடவும் பிறருடைய உதவி இன்றி சுயமாக வாழவும் நீண்ட காலப் பராமரிப்பு அவசியமாக இருக்கிறது. சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய இயன் மருத்துவம், செயல்முறை சிகிச்சை ஆகிய பட்டக் கல்வித் திட்டங்களுக்கும் பாலாஜி சதாசிவன் கல்வி விருது வழங்கப்படுவது திறன்மிக்க இளையரைச் சமூகப் பராமரிப்புத் துறையில் சேர ஊக்குவிக்கும். பராமரிப்பு தேவைப்படுவோருக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை இது மேம்படுத்தும்," என்று ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜேசன் சியா தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!