தர்மன்: இந்தியப் பொருளியலை விரைந்து சீர்திருத்த வேண்டும்

இந்தியா பொரு­ளி­யல் சீர்­தி­ருத்­தங்களை மேலும் விரை­வு­படுத்­து­வது அவசியம் என துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் கூறியிருக்கிறார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் இக்கருத்தை வெளியிட்டார். வேலைகளை உரு­வாக்­கு­வதற்­கும் மேம்பட்ட செழிப்பை உறுதி செய்­வதற்­கும் அடுத்த 20 ஆண்­டு­களில் இந்தியா எட்டு முதல் 10 விழுக்­காடு வரை வளர்ச்சி காண வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் கூறி­யுள்­ளார். 'இந்­தி­யாவை மாற்­றி­யமைத்­தல்' திட்­டத்­தின் முதல் ஆண்டு நிறைவை ஒட்டிய மாநாட்டில் கலந்­து­கொண்ட திரு தர்மன் 'உலகளாவிய பொருளியலில் இந்தியாவின் ஆற்றல் வளம் முழுமை பெறுதல்' எனும் தலைப்­பில் உரை­யாற்றினார். இந்த மாநாட்டில் உயர்­மட்ட அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள், அறி­ஞர்­கள் ஆகியோர் கலந்­து­ கொண்ட­னர்.

இந்­தி­யா­வில் பொருள், சேவை வரி குறித்த மசோதா அண்மை­யில் நிறை­வேற்­றப்­பட்­டா­லும் நிலம் கைய­கப்­படுத்­து­தல், தொழி­லா­ளர் தொடர்­பான செயல்­பாடு­கள், அரசு எந்­தி­ரம் செயல்­ப­டா­மல் முடங்கிக் கிடக்­கும் நிலை ஆகி­ய­வற்­றில் இன்னும் சீர்­தி­ருத்­தம் ஏற்­ப­ட­ வில்லை. வெளி­நாட்­டுத் தலை­வர்­கள் இந்­தி­யாவைப் பற்றி உரை­யா­ற்று வது, மேம்பாட்­டு உத்­தி­களை வழங்­கு­வது ஆகி­ய­வற்றைக் கருப்­பொ­ரு­ளா­கக்கொண்ட மாநாட்டை இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்கி வைத்தார். சிங்கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் நெருக்­க­மான அர­சி­யல், பொரு­ளி­யல் உற­வு­களைக் கொண்­டுள்­ளன. ஆசி­யா­னு­டன் நெருக்­க­மான உற­வு­களை ஏற்­படுத்­திக்­கொள்ள இந்­தி­யா­வுக்கு சிங்கப்­பூர் உதவி வரு­கிறது.

2005ஆம் ஆண்டில் $16.6 பில்­லி­யனாக இருந்த இரு நாடு­களுக்கு இடை­யே­யான வர்த்­த­கம் 2013ஆம் ஆண்டில் $25.5 பில்­லி­யனாக உயர்ந்த­து­டன் இரு­ நா­டு­களைச் சேர்ந்த பல உயர்­நிலைத் தலை­வர்­களும் அதி­கா­ர­ பூர்­வப் பய­ணங்கள் மேற்கொண்ட­னர். தற்­போதைய பய­ணத்­தின்­ போது திரு தர்மன் இந்­தி­யா­வின் பல தலை­வர்­களை­ச் சந்­திப்பார்.

புதுடெல்லியில் மாநாட்டைத் தொடங்கி வைத்த இந்தியப் பிரதமர் மோடியுடன் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி குறித்து மாநாட்டில் உரையாற்றிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (இடது). படம்: இந்திய ஊடகத் தகவல் பிரிவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!