அதிகமான வழக்கறிஞர்கள்; புதிய குழு அமைந்தது

சிங்கப்பூரில் புதிய வழக்கறிஞர் கள் தங்களுடைய வாழ்க்கைத் தொழிலை தொடங்கும் முறையை மறுபரிசீலனை செய்தவற்காக ஒரு புதிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் வழக்கறிஞர்கள் அளவுக்கு அதிகமாகப் பெருகும் ஒரு நிலையைச் சமாளிப்பதற்காக 'நிபுணத்துவ வழக்கறிஞர்கள் பயிற்சிக் குழு' என்ற குழு அமைகிறது. புதிய குழுவிற்கு நீதிபதி குவென்டின் லோ தலைமை ஏற்பார். ஐடிட் அப்துல்லா, கண்ணன் ரமேஷ் ஆகிய நீதித்துறை ஆணையாளர்களும் புதிய குழுவிற்குத் தலைமை ஏற்பார்கள்.

இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு உள்ளூர் சட்ட நிறுவனங்கள் எப்படி பயிற்சி ஒப்பந்தங்களை வழங்குகின்றன என்பதையும் தொழிலில் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளப்பட்டு வேலை யில் அமர்த்தப்பட அத்தகைய பட்டதாரி மாணவர்கள் எப்படி மதிப்பிடப்படுகிறார்கள் என்பதையும் புதிய குழு பரிசீலனை செய்யும். தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் புதிய குழு பற்றி வெள்ளிக்கிழமை அறிவித்தார். வழக்கறிஞர்களை வழக் கறிஞர் சபையில் முறையாக சேர்த்துக்கொள்ளும் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார். இந்த ஆண்டில் வழக்கறிஞர் சபையில் 509 புதிய வழக்கறிஞர்கள் சேர்த் துக்கொள்ளப்பட்டார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!