7,000 பேருக்கும் அதிகமான பட்டத் தொழிலர்கள் பலன்

சிங்கப்பூரில் நிபுணத்துவ தொழில் மாற்றுச் செயல் திட்டத்தில் 2007 முதல் 7,000 பேருக்கும் அதிக நிபுணத் துவர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட் பர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்கள் புதிய தேர்ச்சிகளைப் பெற்று புதிய வேலைகளுக்குச் செல்ல அந்தச் செயல் திட்டம் உதவியிருக்கிறது என்று வாரியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

நிபுணத்துவ தொழில் மாற்றுச் செயல் திட்டம் பல தொழிற்துறைகளை இலக்காகக் கொண்டது. பாலர்பள்ளி பராமரிப்பு, கல்வி, சில்லறை வர்த்தகம், அறிவுச் சொத்துத் துறை, உணவு சேவைத் துறை முதலானவை அவற்றில் அடங்கும். ஒரு துறையில் பல ஆண்டுகாலம் வேலை பார்த் திருப்போர் நடுவில் அந்தத் துறையைவிட்டு விலகி வேறு துறையில் வேலைக்குப் போக இச்செயல்திட்டங்கள் உதவும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!