பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய பங்ளாதேஷ் ஊழியர்களுக்குச் சிறை

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் கைதான இரு பங்ளாதேஷ் ஊழியர்கள் பயங்கரவாத நடவடிக் கைகளுக்கு நிதி திரட்டிய குற்றத்ததை ஒப்புக்கொண்டனர். பயங்கரவாத நடவடிக்கை களுக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக மாமுன் லீகோட் அலி, 30, ஸமான் தாவ்லுட், 34, ஆகிய இருவருடன் மேலும் நால்வர் முன்னதாகக் கைது செய்யப்பட் டனர். மற்ற நால்வரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றனர். ஆனால் மாமுன்னும் ஸமானும் குற்றச் சாட்டை மறுத்து வழக்கு தொடர்ந்து இருந்தனர். எனினும் அவ்விருவரும் நேற்று நீதிமன்றத்தில் தங்கள் குற்றச் சாட்டை ஒப்புக்கொண்டனர். அதற்காக மாமுன்னுக்கு 2 1/2 ஆண்டுகள் சிறையும் ஸமானுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன.

அந்த இரு ஆடவர்களும் தங்கள் செயல்கள் மூலமாகச் சிங்கப்பூர் மக்களுக்கு அச்சத் தையும் பாதிப்பையும் உண்டாக் கியதற்காக மிகவும் வருந்துவதாக அவர்களைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்கள் கூறினர். மூடத்தனமாகச் சிந்தித்து அவர்கள் இந்தத் தவறை இழைத்த தாகவும் இஸ்லாம் மதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் கெட்ட பெயரைக் கொண்டு வந்ததற்காக மிகவும் வெட்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. கைதான அறுவரும் தங்களை பங்ளாதேஷ் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்பி) என அழைத்துக் கொண்டதுடன் பங்ளாதே‌ஷில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த நிதி வழங்கினர் அல்லது திரட்டினர். பங்ளாதேஷ் அரசைக் கவிழ்த்து அதற்கு பதில் இஸ்லாமிய நாட்டை நிலைநாட்டி அதனை ஈராக், சிரியாவில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அந்த அறுவரின் நோக்கம்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றம் புரிந்த மாமுன் லீகோட் அலி, 30 (இடது) ஸமான் தாவ்லுட், 34. படங்கள்: உள்துறை அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!