கடல் பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகம்

கடல் பாது­காப்பை மேம்படுத்­தும் அனைத்து முயற்­சி­களை­யும் சிங்கப்­பூர் எடுத்து வரு­வ­தாக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் நேற்று தெரி­வித்­தார். முதல் முறையாக நடை­பெ­றும் கடல் பாது­காப்பு மாநாட்­டில் அவர் கலந்­து­கொண்டு பேசினார். கடல் பாது­காப்பை மேம்படுத்­த சிங்கப்­பூ­ரின் கடல் துறை, துறைமுக ஆணையம் மேற்­கொண்டுவரும் சில புதிய நட­வ ­டிக்கை­களையும் அவர் அறி வித்­தார். சிங்கப்­பூர் நீரிணையை பயன்­படுத்­தும் மாலு­மி­கள், படகுப் பய­ணி­கள் ஆகி­யோ­ருக்கு பயன் அளிக்­கும் வகையில் புதிய பாது­காப்பு தொடர்­பான காணொளி ஒன்று தயா­ரா­கி­யுள்­ளது. மலேசியா, இந்­தோனீ­சியா ஆகி­ய­வற்­றின் கடல்­துறை அதி­கா­ரி­களு­டன் இணைந்து, இந்த காணொளி உரு­வாக்­கப்­பட்­டது. மேலும் இயந்­தி­ரத்­தால் இயங்­கும் கலன்களுக்கு புதிய கட்டு பாடு­களும் அறி­மு­கம் காண­ வி­ருக்­கின்றன.

பாது­காப்பு இயக்­கங்கள் மூலம் விபத்­து­கள் குறைந்­துள்­ள­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார். கடந்த ஆண்டில் மட்டும் ஒரே ஒரு விபத்து ஏற்­பட்­டுள்­ளது. இந்த மாதத் தொடக்­கத்­தில், சரக்குக் கப்­ப­லு­டன் எண்ணெய் கப்­ப­ல் மோதியது. இந்த விபத்­தால் இரு தரப்­பி­ன­ருக்­கும் சேதம் ஏற்­பட்­டது. "நாம் அடைய வேண்டிய இலக்கை இன்னும் எட்­ட­வில்லை. கடல் பாது­காப்பை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்," என்றார் அமைச்­சர். சிறிய கலன்களுக்கு ஏற்­படும் ஆபத்­துக்­களைக் குறைக்க சிங்கப்­பூர் புதிய கடப்­பாட்டை அறி­மு­கம் செய்­துள்­ளது. சிங்கப்பூரின் கடலைப் பயன் படுத்தும் அனைத்து சிறிய கலன் களும் தானியங்கி அடையாள அமைப்பைக்கொண்ட அலை வாங்கிச் செலுத்தியைப் பொருத்த வேண்டும். மேலும் அனைத்­து­லகக் கடல்­சார்ந்த நிறு­வ­னத்­தின் தரத்­திற்கு ஏற்ப மின்னியல் அட்டவணை முறையை செயல்படுத்த வேண்டும். இந்தப் புதிய திட்டத்தின் வழி கடலில் செல்லும் கப்பல்கள் அவற்றின் மின்னியல் அட்ட வணை மூலம் சிறு கலன்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும். அதே போல சிறு கலன்களும் பிற கப்பல்களின் நடமாட்டத்தைக் கவனத்தில் கொள்ள முடியும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

இந்தப் புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆகும் செலவை சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையம் ஏற்றுக்கொள்ளும். பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளில் பொருத்தப்பட்டிருக் கும் பாதுகாப்பு சாதனங்களின் பாரமரிப்பை மேம்படுத்த தேவை யான வேலைகளை ஆணையம் மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் வட்டாரப் பயணிகள் படகுகள் மீது பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு இந்தோனீ சியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்த பொருளுடன் மோதியது. இந்த விபத்தில் 51 சிங்கப்பூர்கள் உட்பட 91 பேர் காப்பாற்றப்பட்டனர். இது போன்ற விபத்துகள் நிகழலாமல் இருக்கவே இந்த சிறப்பு ஏற்பாடு. படகுப் பயணிகளுக்கான பாதுகாப்பு காணொளி ஒன்றை ஆணையம் உருவாக்கி வருவ தாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்துலக கடல்சார்ந்த நிர்வாகமும் அரசாங்கம் சாரா நிறுவனங்களும் தங்கள் திறன் களையும் சிறந்த தொழில் நடை முறைகளையும் பகிர்ந்து கொள்ள சமூகத் தளம் ஒன்றை ஆணையம் ஏற்பாடு செய்யும் என்றும் அமைச்சர் கோ தெரிவித்தார்.

கடல்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கடல் பாதுகாப்பில் பின்பற்ற வேண்டிய சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை அமைச்சர் கோ பூன் வானுக்கும் (இடமிருந்து 3வது) மாநாட்டில் கலந்துகொள்ளும் பங்கேற்பார்கள் ஆகியோருக்கும் விளக்கம் அளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!