ஷெங் சியோங் கடத்தல்; குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விற்பனை ஊழியர்

ஷெங் சியோங் பேரங்காடிகளின் முதலாளி திரு லிம் ஹோக் சீயின் தாயார் கடத்தப்பட்ட வழக்கில் விற்பனை ஊழியரான லீ ஸி யோங் நேற்று நீதிமன்றத்தில் தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். பிணைத்தொகை கிடைக்கா விட்டாலும் திருவாட்டி இங் லை போவை அன்றைய தினமே விடு விக்கும் எண்ணத்தில் இருந்த தாகவும் 44 வயது விற்பனை ஊழியரான அவர் சொன்னார். உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக நேற்று ஷெங் சியோங் பேரங்காடி முதலாளியின் தாயார் கடத்தப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்தது.

இந்த வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட லீ, திரு வாட்டி இங்கை அணுகிய சமயத் தில் தம்முடைய அதிர்ஷ்டத்தை சோதிக்கவே விரும்பியதாகத் தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஹவ்காங் அவென்யூ 2ல் உள்ள மேம்பாலம் அருகே 79 வயது திருவாட்டி இங் லை போ கடத்தப்பட்டார். நீதிமன்றத்தில் தொடர்ந்து பேசிய லீ, அன்றுகாலை நான்கு மணி நேரத்துக்கு முன்புதான் ஹோண்டா சிவிக் காரை வாட கைக்கு எடுத்திருந்ததைச் சுட்டிக் காட்டினார். "என்னுடைய காரில் அவர் ஏறி விடுவார் என்று அப்போது என்னுடைய மனதில் தோன்ற வில்லை," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!