சிங்கப்பூரில் மேலும் 38 பேருக்கு ஸிக்கா கிருமி

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் 12.00 மணி நேர நிலவரப்படி உள் ளூரில் ஸிக்கா கிருமி பரவியதில் மேலும் 38 புதிய சம்பவங்கள் ஏற் பட்டுள்ளன என்று நேற்று வெளி யிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு உறுதி செய்தது. இந் நிலையில் ஸிக்கா கிருமி பர வலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

அதே சமயத்தில் வீட்டு உரிமை யாளர்கள் கொசு பெருக்கத்தைத் தடுக்க உதவும் ஐந்து கட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று வரை 189 பேர் ஸிக்கா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஸிக்கா சம்பவங்களைக் கையாள்வதில் சிங்கப்பூர் முன்மாதிரியாக விளங் குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!