வட்ட ரயில் சேவையில் தொலைபேசி சேவை துண்டிப்பு

வட்­டப்­பாதை ரயில் நிலை­யங்க­ளான கெண்ட் ரிஜ், ஹாவ் பார் வில்லா, பாசிர் பாஞ்சாங், லாப்­ர­டார் பார்க் ஆகி­ய­வற்­றில் நேற்று மாலை 7 முதல் 9 வரை கைத்­தொலை­பேசி சேவைகள் துண்­டிக்­கப்­பட்­டன. வட்ட ரயில் பாதையின் சேவை யில் ஏற்­பட்­டுள்ள சமிக்ஞை பிரச்­சினை குறித்த ஆய்­வுக்­காக தொலைபேசி சேவை சமிக்ஞை­கள் துண்டிக்கப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் முன்­கூட்­டியே அறிவித்தி­ருந்தது. புலன்­ வி­சா­ரணை­யின் ஒரு பகு­தி­யாக இடம்­பெற்ற இந்த நட­வ­டிக்கை­யின்­போது சுரங்கப்­ பாதை­யில் பய­ணிகள் கைத் ­தொலை­பே­சி­களைப் பயன்­ படுத்த முடியாது என்று ஆணையம் கூறி­யி­ருந்தது. வட்ட ரயில் பாதையில் நேற்றுக் காலை நேரத்­தி­லும் தாமதம் ஏற்­பட்­டது. ரயில் சேவையை நடத்­தும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் சேவையில் ஏற்­பட்­டுள்ள சமிக்ஞை பிரச்­சினைக்கு இன்­ன­மும் தீர்வு காணாததே இதற்­கான காரணம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!