சீனா - சிங்கப்பூர் இணைப்பு திட்டத்தில் முன்னேற்றம்

சீனாவின் சோங்கிங் நக­ருக்­குப் பயணம் மேற்­கொண்­டுள்ள பிர­த­மர் லீ சியன் லூங், சீன அதிபர் ஸி ஜின்­பிங்கை நேற்றுச் சந்­தித்­தார். இரு நாடு­களுக்­கிடையே நிலவும் அணுக்­க­மான நீண்ட­கால நட்­பு­றவை இரு­நாட்­டுத் தலை­வர்­களும் நேற்றைய சந்­திப்­பில் மறு உறுதிசெய்­த­னர். இரு நாடு­களின் அதி­கா­ரி­களும் சிங்கப்­பூர் -=சீனா குறித்த தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்தத்தை மேம்படுத்­தும் பணியில் ஈடு­பட்­டுள்­ளதை அவர்கள் சுட்­டி­னர். அத்­து­டன் சோங்கிங் இணைப்­புத் திட்டம் பற்­றி­யும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர் என்று பிர­த­மர் அலு­வ­லக அறிக்கை தெரி­வித்­தது.

இந்தத் திட்டம் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் கண்­டுள்­ளது என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார். குறிப்­பாக இந்தத் திட்­டத்­தில் நிதிச் சேவைகள் பற்­றி­யும் விமானப் போக்­கு­வ­ரத்து இணைப்­புப் பற்­றி­யும் இரு நாட்டுத் தலை­வர்­களும் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர். சோங்கிங் உட்பட சீனாவின் ஏழு மாநி­லங்கள், நக­ரங்கள் தொடர்­பாக அண்மை­யில் அறி­விக்­கப்­பட்ட தடை­யற்ற வர்த்­தக வட்­டா­ரத் திட்­டத்­தில் சிங்கப்­பூர் பய­னுள்ள பங்கை ஆற்ற முடியும் என்று சீன அதிபர் ஸி கூறினார். மேலும், அந்த 20 நிமிடச் சந்­திப்­பில் பரஸ்­பர மரியாதை, புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்­றின் அடிப்­படை­யில் இரு­நா­டு­களுக்­கும் பய­னுள்ள வழி­களில் இரு­நாட்டு ஒத்­துழைப்பை மேம்படுத்­த­வும் இரு­வ­ரும் இணக்­கம் கண்ட­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!