ஃபேர்பிரைசின் தள்ளுவண்டி பிரச்சினைக்குத் தீர்வு

ஜூரோங் பாயிண்ட்­டில் உள்ள இரு என்­டி­யுசி ஃபேர்­பிரைஸ் பேரங்கா­டி­களில் பொருட்­கள் வாங்கும் வாடிக்கை­யா­ளர்­களில் பலர் தள்­ளு­வண்­டி­களைத் திரும்பக்­கொண்டு வந்து வைப்­ப­தில்லை. ஃபேர்­பிரைஸ் ஊழி­யர்­கள் அன்றா­டம் 150 முதல் 200 தள்­ளு­வண்­டி­களைத் தேடிச் சென்று எடுத்து வர­வேண்­டும். இந்தப் பிரச்­சினைக்­குத் தீர்­வு­காண, ஃபேர்­பிரைஸ் தள்­ளு ­வண்­டி­களைத் திருப்­பிக் கொண்­டு­வந்து வைப்பது குறித்து ஊழி­யர்­கள் வாடிக்கை­யா­ள­ருக்­குக் எடுத்­துச் சொல்வது, துண்டு அறிக்கை­களை விநி­யோ­கிப்­பது போன்ற முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­னர். இந்த முன்னோடித் தள்­ளு­வண்டி அம­லாக்­கத் திட்டம் நேற்று ஜூரோங் பாயிண்ட் ஃபேர்­பிரைஸ் பேரங்கா­டி­யில் தொடங்கப்­பட்­டது. இங்கு தான் ஆக அதி­க­ள­வில் தள்­ளு­வண்­டி­கள் திரும்ப வைக்­கப்­படு­வ­தில்லை.

இங்கு தள்­ளு­வண்டி அம­லாக்க அதி­கா­ரி­கள் பேரங்கா­டின் வெளி­ வா­யி­லி­லும் தள்­ளு­வண்டி வைக்கும் இடங்களி­லும் செயலில் இருப்­பர். கடந்த 2015ல் ஃபேர்­பிரைஸ் கிட்­டத்­தட்ட 1,000 தள்­ளு­வண்­டி­களை இழந்தது. இதனால் புதிய தள்­ளு­வண்­டி­களை வாங்­கு­வது, பழு­து­பார்ப்பது, காணாமல் போன தள்­ளு­வண்­டி­களைத் தேடி எடுத்­து­வ­ரும் ஊழி­யர்­களுக்­கா­கும் செலவு என ஃபேர்­பிரை­ஸுக்கு $150,000க்கும் அதி­க­மாக செல­வா­கிறது. இந்த எண்­ணிக்கை கடந்த ஐந்து ஆண்­டு­களில் 20% கூடி­யுள்­ளது.

ஜூரோங் பாயிண்ட் ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்கு வெளியே தள்ளுவண்டி அமலாக்க ஊழியர் கே.சுகுமாறன், 41, ஃபேர்பிரைஸ் வாடிக்கையாளர் தள்ளுவண்டியைத் திருப்பி வைக்க உதவுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!