அதிபர் தேர்தல் முறை அறிமுகமாகி 25 ஆண்டுகள் கழித்து மாற்றம் ஏன்?

வாக்­களிப்­பின்­மூ­லம் அதி­பரைத் தேர்ந்­தெ­டுக்­கும் நடைமுறை செயல்­படுத்­தப்­பட்டு 25 ஆண்­டு­களுக்­குப் பிறகு, இப்போது இதைச் செய்­வதற்கு சில கார­ணங்கள் இருப்­ப­தாக பிர­த­மர் கூறினார். முத­லா­வ­தாக, வாக்­களிப்­பின்­மூ­லம் அதி­பரைத் தேர்ந்­தெ­டுக்­கும் நடை­முறையை அம­லாக்­கி­ய­போதே இந்தப் பிரச்­சினை இருப்­பது தெரியும். சொல்­லப்­போனால், அனை­வ­ருக்­கும் தெரியும். மலாய்க்­கா­ரர் அல்லது இந்­தி­யர் அதி­ப­ராக இருப்­பது அதிக சிர­ம­மாக இருக்­கும் என்பதை உணர்ந்­தி­ருந்­தோம். ஆனால் தொடக்­கத்­தில், அதிக அவகாசம் இருப்­ப­தா­கக் கரு­தி­னோம். உட­ன­டி­யான பிரச்­சினை­யாக இல்லை. தேர்­தல்­களில் கடுமை­யான போட்டி இல்லை. அதி­ப­ரா­கக் கூடிய வேட்­பா­ளர்­களைச் சிர­மப்­பட்­டுத் தேடினோம். இந்த முறை எவ்வாறு செயல்­ப­டப் போகிறது என்­பதைப் பொறுத்­தி­ருந்து பார்ப்­ப­தற்கு 25 ஆண்­டு­கள் இருந்தன. ஒரே ஒரு சிறு­பான்மை இன அதிபர், திரு நாதன், மட்டுமே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு சிறப்­பான சேவை­யாற்­றினார். அவர் இரு முறையும் (1999, 2005) போட்­டி­யின்றி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு சிங்கப்­பூ­ரர்­ களின் இத­யங்களில் இடம்­பி­டித்­தார்.

எனினும், அவர் முதன்­மு­த­லில் வேட்­பா­ள­ராக வந்த­போது சிங்கப்­பூ­ரர்­களுக்கு அவரைப் பற்றி அதிகம் தெரி­யா­த­நிலை­யில் தேர்தல் நடந்­தி­ருந்தால் முடிவு எப்படி இருந்­தி­ருக்­கும் என்பதை என்னால் உறு­தி­யா­கக் கூற முடியாது. அதைச் சொல்வது சிரமம் என்று விளக்­கிய திரு லீ, 2011 தேர்­த­லில் கடுமை­யான போட்டி நில­வி­யதைக் குறிப்­பிட்­டார். "இத்­தகைய தேர்­த­லில் சிறு­பான்மை வேட்­பா­ள­ருக்கு நியா­ய­மான வாய்ப்­புக் கிடைக்­கும் என்று நான் நினைக்­க­வில்லை. எதிர்­கா­லத்­தி­லும் அதிபர் தேர்­தல்­களில் இது­போன்ற கடுமை­யான போட்டி நிலவும் என நான் எதிர்­பார்க்­கி­றேன். இதனால் பிரச்­சினை மேலும் மோச­மா­கும். இதுதான் இரண்டா­வது காரணம். 25 ஆண்­டு­களுக்­குப் பிறகு நிலைமை மாறி­விட்­டது என்று நினைக்­கி­றேன்," என்றார் அவர். "இது நான் செய்து முடிக்க வேண்டிய ஒன்று என்றும் அடுத்து வரு­ப­வ­ரி­டம் விட்­டுச்­செல்­லக்­கூ­டாது என்றும் நான் நினைப்­பதே இந்தக் காரி­யத்தை இப்போதே நான் மேற்­கொள்­வதற்­கான மூன்றா­வது காரணம்," என்றார் அவர்.

"இது எனக்­குப் பழக்­கப்­பட்ட நடை முறை, முதன்­மு­த­லில் இந்த நடை­முறையை நாங்கள் அறி­மு­கப்­படுத்­தி­ய ­போது, இதை வடி­வமைக்க நான் உதவி­னேன், இதை நடை­முறைப்­படுத்­து­வ­தி­லும் திருத்­து­வ­தி­லும் மேம்படுத்­து­வ­தி­லும் நான் அங்கம் வகித்­தி­ருக்­கி­றேன். இடை­யிடை­யில் தேவையான மாற்­றங்கள் செய்து, நான் பிர­த­ம­ராக இருந்த ­போது, திரு நாதன், டாக்டர் டோனி டான் ஆகி­யோ­ரு­டன் செயல்­படுத்­தி­யி­ருக் ­கி­றேன். "எனவே, இந்தப் பிரச்­சினை பற்றி எனக்கு நன்கு தெரியும். இதைக் கையா­ளு­வது எனது கடமை என்று நினைக்­கி­றேன். இது செய்­யப்­ப­ட­வேண்­டிய ஒன்று என்று நான் நம்­பு­கி­றேன். இதை நான் செய்ய விரும்­பு­கி­றேன். "இது சிங்கப்­பூ­ரின் நல­னுக்­காக நாம் செய்ய­ வேண்­டிய ஒன்று என சிங்கப்பூரர் களை நம்ப வைப்பேன். இதை நாம் செய்­யா­விட்­டால், சிங்கப்­பூ­ருக்­குப் பிரச்­சினை ஏற்­படும் என்று நினைக்­கி­றேன். இன்றல்ல, நாளை­யல்ல, ஆனால் கண்­டிப்­பாக 10, 15, 20 ஆண்­டு­களில் பிரச்­சினை­கள் உருவா­வதற்கு முன்பாக இப்போதே இதை நாம் செய்­தா­க ­வேண்­டும்," என்றார் பிரதமர் லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!