சிகரெட் கடத்தல்; சிங்கப்பூரருக்கு 6.6 மில்லியன் வெள்ளி அபராதம்

சுங்க வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்த 61 வயது சிங்கப்பூரருக்கு இம்மாதம் 1ஆம் தேதி 6.6 மில்லியன் வெள்ளி அபராதமும் 38 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த முடியவில்லையென்றால் அப்துல் ர‌ஷித் அப்துல்லா மேலும் 22 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று அப்பர் பாயா லேபார் ரோட்டில் உள்ள மாடி வீட்டில் சுங்கவரி செலுத்தாத சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து மேற் கொள்ளப்பட்ட சோதனையில் 2,400 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு செலுத்த வேண்டிய சுங்கவரி, பொருள் சேவை வரியின் மதிப்பு 204,990 வெள்ளி. விசாரணையில் திரு ர‌ஷித் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. கடந்த 2008ஆம் ஆண்டிலும் இதே போன்ற குற்றத்திற்காகத் தண்டனைப் பெற்று அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!