பிரதமர் லீ: ‘ஜி20’ மாநாடு வெற்றி

சீனாவின் ஹங்ஸோவ்வில் 'ஜி20' தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் லீ சியன் லூங், 'ஜி20' உச்சநிலை மாநாட்டை ஒரு வெற்றியாக வருணித்தார். நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் உச்ச மாநாட்டில் ஆற்றிய தமது உரையின் முக்கிய அம்சங் களை நினைவூட்டினார். அனைத்துலக வர்த்தகத்தை மேம்படுத்தும் மூன்று அணுகு முறைகள் குறித்து அவர் பேசி யிருந்தார். முதலில், போட்டித் திறனுடன் திகழ உள்ளூர் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவி செய்து அனைத்துலக வாய்ப்புகளைக் கண்டறிதல்.

இரண்டாவது, பசிபிக் வட்டார பங்காளித்துவ உடன்பாடு போன்ற தடையற்ற ஒப்பந்தங்கள் மூலம் வட்டார ரீதியில் வர்த்தகத்தை மேம்படுத்துதல். மூன்றாவது, தடையற்ற வர்த்த கத்துக்கு அனைத்துலக ரீதியில் ஒத்துழைப்புகளை வழங்குதல் என்று திரு லீ தெரிவித்தார். 'ஜி20' உச்சநிலை மாநாட்டில் விருந்தினராகப் பங்கேற்க சீனா அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பிரதமர் லீயின் பயணம் அமைந் தது. -இந்நிலையில் சீனாவிலிருந்து லாவோசுக்கு வந்து சேர்ந்ததைக் காட்டும் தமது புகைப்படங்களை அவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி யிருந்தார். அங்கு நடைபெறும் ஆசியான், கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள் கிறார்.

ஆசியான் கூட்டத்தில் ஆசி யான் அமைப்பின் பத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங் கேற்கின்றனர். ஆசியான் கூட்டத்தில் பேரிடர் நிகழும் சமயங்களில் அணுக்கமாக ஒத்துழைப்பது உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி ஆசியான் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வியாழக்கிழமை வரை திரு லீ அங்கு தங்கியிருக்கிறார். "அடுத்த சில நாட்களில் ஆசியான் தலைவர்களுடனும் இதர தலைவர்களுடனும் கலந்து ரையாடுவதை எதிர்பார்க்கிறேன்," என்று ஃபேஸ்புக்கில் பிரதமர் லீ எழுதியிருந்தார்.

இதற்கிடையே லாவோஸ் தலைநகர் வியன்டியனில் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட் டேவை பிரதமர் லீ சந்தித்தார். பிற்பகலில் 28வது, 29வது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்பு இந்தச் சந்திப்பு நடந்தது. இரு தலைவர்களும் சிங்கப் பூருக்கும் பிலிப்பீன்சுக்கும் இடை யிலான நீண்டகால, நெருக்கமான உறவை மறுவுறுதிப்படுத்தினர் என்றும் 2019ல் இரு தரப்பு அரச தந்திர உறவின் பொன் விழா கொண்டாட்டத்தை இருவரும் எதிர்பார்ப்பதாகக் கூறியதாகவும் பிரதமர் லீயின் பத்திரிகை செய லாளர் சாங் லி லின் தெரிவித்தார். உள்ளூர் வட்டார நிலவரங்கள் குறித்தும் இருவரும் பேசினர். சிங்கப்பூருக்கு வருமாறு திரு டுட்டர்ட்டேவுக்கு பிரதமர் லீ அழைப்பு விடுத்தார்.

லாவோசில் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டேவைச் சந்தித்த பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!