மீண்டும் ‘நியமன அதிபர்’ யோசனை

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக அதிபர் ஒருவரை நாடாளுமன்றம் நிய மிக்கலாம் என்றும் அவர் நாட்டின் அடையாளம், ஐக்கியம் ஆகிய வழமையானப் பணிகளை ஆற்று வதில் ஒருமித்த கவனம் செலுத் தலாம் என்றும் அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு யோசனை தெரிவித்துள்ளது. நாட்டின் காப்புநிதியைக் கட் டிக்காப்பது, அரசாங்கச் சேவை யின் நேர்மையை நிலைப்படுத்து வது ஆகிய அதிபரின் பாது காப்புப் பணிகளை ஒரு வல்லுநர் கள் குழு ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஆணைக்குழு கூறியுள் ளது.

சிங்கப்பூரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் அதிபர் தேர்தல் முறையைப் பரிசீலித்து அதன் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட ஆணைக்குழு பிரதமரிடம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த யோசனை களைத் தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூரில் 1991ல் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப் படும் அதிபர் முறை அறிமுகமானது.

அப்படி தேர்ந்தெடுக்கப் படும் அதிபர், நாட்டின் கடந்த கால இருப்புப் பெட்டகத்திற்கான இரண்டாவது சாவியை தன்வசம் வைத்திருக்க அந்த முறை வகை செய்கிறது. இத்தகைய ஓர் அதிபர் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய சூழல் வரலாம். இத்தகைய சூழலைத் தவிர்த்துகொள்ளும் வகையில் அதிபரின் இந்தப் பணிகளை ஏற்றுக்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பை ஏற்படுத்தலாம் என்று ஆணைக்குழு பரிந்துரைத்து உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!