தகுதியானவர்கள் அதிபர் பதவி ஏற்பதை உறுதிப்படுத்த கடுமையான நிபந்தனைகள்

அதிபர் பதவிக்குப் போட்டியிடக் கூடிய பொது, தனியார் துறை வேட்பாளர்களுக்கான தகுதி விதிகளில் விரிவான மாற்றங்களை அரசமைப்புச் சட்ட ஆணைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படு பவர், தேசிய காப்புநிதியின் பாது காவலராகத் தாம் ஆற்றவேண்டிய கடமையைச் செய்வதற்குரிய ஆற்றலும் அனுபவமும் பெற்றிருப் பதை மாற்றங்கள் உறுதிப்படுத்தும் என்று ஆணைக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டது. இந்தக் கடமையில் சிக்கலான, உயர் தொழில்நுட்ப விவகாரங்கள் உள்ளடங்கும்.

தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியளிக்கக்கூடிய பதவியில் பொது அல்லது தனியார் துறையில் ஆறு ஆண்டுகள் சேவையாற்றி இருக்கவேண்டும் என்பது முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாகும். இப்போதைய மூன்று ஆண்டுகால நிபந்தனையைவிட இது இரு மடங்கு அதிகம். வேட்பாளர் சமீப காலத்தில் அனுபவம் பெற்றிருப் பதை உறுதிப்படுத்திட, அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு முந் தைய 15 ஆண்டுகளுக்குள் வேட்பாளர் ஆறு ஆண்டுகாலச் சேவையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

அப்படியானால், அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டால், அதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் 2002ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது ஆறு ஆண்டுகாலம் தகுதியளிக்கும் பதவியில் இருந்திருக்கவேண்டும். முற்றிலும் செலுத்தப்பட்ட $100 மில்லியன் மூலதனமுள்ள பெரிய நிறுவனங்களை நடத்துவதில் வேட்பாளருக்கு அனுபவம் இருக்க வேண்டும் என்ற இப்போதைய விதிமுறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை $500 மில்லியன் பங்குதாரர்களின் பங்கு முதலாக மாற்ற ஆணைக்குழு பரிந்துரை செய்கிறது. நிறுவனத் தின் அளவுக்கு இதுவே நல்ல அறிகுறியாக இருக்கும் என்பது ஆணைக் குழுவின் கருத்து. "முற்றிலும் செலுத்தப்பட்ட மூலதனத்தைப் போலல்லாமல், பங்குதாரர்களின் பங்குமுதல் ஒரு நிறுவனத்தின் (வரலாற்று மதிப்பை மட்டுமன்றி) நடப்பு மதிப்பைப் பிரதிபலிக்கிறது," என அறிக்கை விளக்கமளித்தது.

அதிபர் எடுக்கவேண்டிய தீர் மானங்களின் முக்கியத்துவத் தையும் காப்புநிதியில் உள்ள சேமிப்பு உள்ளிட்ட கணிசமான தொகைகள் பற்றி தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான தன்னம் பிக்கையையும் கருத்தில் கொண்டு $500 மில்லியன் தொகை நிர்ண யிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!