பேருந்து மோதிய தகடு வெட்டி மாது பலி

சாலையில் ஒரு பேருந்து தரைச் சரிவில் சறுக்கி ஓடி சாலையிலுள்ள அறிவிப்பு தகடு ஒன்றில் இடித்து விட்டதையடுத்து நிகழ்ந்த ஒரு விபத்தில் 68 வயது மாது ஒருவர் இறந்துவிட்டார். புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோடும் புக்கிட் பாஞ்சாங் ரோடும் சந்திக் கும் இடத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.56 மணிக்கு ஒரு தனி யார் பேருந்தும் பாதசாரி ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி தனக்குத் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது.

திருவாட்டி ஓங் லிம் என்ற மாது சாலையோரம் டாக்சிக்காக காத்திருந்தபோது ஒரு பேருந்து நகர்ந்து சாலைக் கடப்பு அறிவிப் புத் தகடு பொருத்தப்பட்டு இருந்த ஒரு கம்பத்தில் இடித்துவிட்ட தாகத் தெரிகிறது. அந்தக் கம்பம் விழுந்து இரும்புத் தகடு ஓங்கின் முகத்தில் மோதிவிட்டது. அவருடைய காலி லும் ஆழமாக வெட்டிவிட்டது என்று அந்த மாதின் பேரன் லிம் ஜியா செங் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். அந்த மாது தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்ட தாகவும் அங்கு அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது.

இந்த விபத்தை பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால் தயவுசெய்து தன்னுடன் தொடர்புகொள்ளும்படி திரு லிம் ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

புக்கிட் பாஞ்சாங்கில் ஒரு சரிவில் நகர்ந்து ஓடிய பேருந்து இதுதான். (இடது). இந்தப் பேருந்து சாலைக் அறிவிப்புக் கம்பத்தில் மோதிவிட்டது. அந்தக் கம்பம் விழுந்து அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்புத் தகடு 68 வயது மாதைக் கடுமையாகத் தாக்கிவிட்டது. படம்: ஃபேஸ்புக்/ லிம் ஜியா செங்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!