பிரதமர் லீ: ஆசியானுக்கு இந்திய உறவு மிக முக்கியம்

பொருளியல், தொடர்பு என்று பார்க்கும்போது இந்தியா ஆசியானின் மிக முக்கியமான பங்காளியாகத் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நேற்று நடந்த 14வது ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டில் இந்திய, ஆசியான் சந்தைகள் இரண்டுமே மிகப் பெரியவை, துடிப்புமிக்கவை என்று திரு லீ குறிப்பிட்டார். "வர்த்தகத்தை மேம்படுத்தவும் முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் வகையில் இரு தரப்புகளும் ஒருங்கிணைந்து பணி ஆற்றும் பட்சத்தில் ஆசியாவின் வளர்ச்சியில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பிரதமர் சொன்னார்.

அந்த இலக்கை எட்ட, ஆசியான்- இந்தியா தடையற்ற வர்த் தக உடன்பாடு, வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவம் ஆகியவை நல்ல வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் அவர் சுட்டினார். ஆசியான்=இந்தியா பொரு ளியல் ஒத்துழைப்பை முடுக்கி விடுவதில் ஆசியான்-இந்தியா தடையற்ற வர்த்தக உடன்பாடு முக்கிய காரணியாக நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா, மியன்மார், தாய்லாந்து நெடுஞ்சாலை, இந்தியா, மியன்மார், லாவோஸ், வியட்னாம், கம்போடியா நெடுஞ்சாலை உள்ளிட்ட ஆசியான்- இந்தியா இடையிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒரு பில்லியன் அமெ ரிக்க டாலரை கடனாக வழங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை சுட்டிக்காட் டிய அவர், வட்டாரத் தொடர்பில் இந்தியா மிக முக்கிய அங்க மாகத் திகழ்ந்து வருகிறது என்றும் கூறினார். இப்படி ஆசியானுக்கும் இந்தி யாவுக்கும் இடையே தரைவழி இணைப்பு வலுவாகி வரும் நிலை யில் ஆகாயவழித் தொடர்புகளும் அவசியம் என்றார் பிரதமர் லீ.

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உத்திபூர்வ ஈடுபாட்டை சிங்கப்பூர் வெகுகால மாகவே ஆதரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆழமான ஈடுபாடு, இன்னும் துடிப்புமிக்க ஒத்துழைப்பு என இரு தரப்பு உறவுகளில் அடுத்த அத்தியா யத்தை எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!