மேலும் ஒன்பது பேர் ஸிக்காவால் பாதிப்பு

நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் ஒன்பது பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. பீஷான் ஸ்திரீட் 12ல் மேலும் ஒருவருக்கு அந்த நோய் தொற்றி யுள்ளது. அதேபோல எலிட் டெரசிலும் மேலும் ஒருவர் ஸிக்கா வால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை எலிட் டெரசில் மூவரும் பீஷான் ஸ்திரீட் 12ல் நால்வரும் ஸிக்காவால் பாதிக்கப் பட்டுள்ளனர். நான்கு பேர் அல் ஜுனிட் கிரசெண்ட்/சிம்ஸ் டிரைவ்/ காலாங் வே/பாய லேபார் வே வட்டாரங்களுடன் தொடர்புடைய வர்கள்.

ஸிக்கா தொற்றால் பாதிப் படைந்துள்ள இருவர் ஏற்கெனவே பாதிக்கப்புக்குள்ளான வட்டாரங் களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், உபி கிரசெண்ட் வட்டாரத்துடன் தொடர்புள்ள ஒருவருக்கு ஸிக்கா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து யூனோஸ் தொழிற் பேட்டையுடன் தொடர்புடைய மூவர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 292 பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி மொத்தம் 166 கொசு இனப் பெருக்க இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, சிங்கப்பூரில் பரவி வரும் ஸிக்கா கிருமி வகை பிரேசிலிலிருந்து வந்ததல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அல்ஜுனிட் கிரசெண்ட்-சிம்ஸ் டிரைவ் வட்டாரத்தில் பொதுமக்களைப் பாதித்த ஸிக்கா கிருமி வகை, 1960 களிலிருந்து தென்கிழக்காசி யாவில் இருந்து வரும் கிருமி வகையை ஒத்திருப்பதாக சுகாதார அமைச்சும் ஏஸ்டார் அமைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த மே மாதம் ஸிக்கா கிருமியால் பாதிக் கப்பட்ட ஒருவரிடமிருந்து கண்டெ டுக்கப்பட்ட கிருமி வகை தென் அமெரிக்காவில் காணப்படும் கிருமி வகையைப் போன்றது என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!